கொரோனா காலத்தில் அதிக மன அழுத்தத்தில் தவிக்கும் மாணவர்கள் தேர்வை எதிர்கொள்வது எப்படி : ஜே.இ.இ, நீட் தேர்வுகளை ஒத்திவைக்க பிரதமர் மோடிக்கு கடிதம்!! - Minnal Kalvi Seithi

Breaking

Monday, August 24, 2020

கொரோனா காலத்தில் அதிக மன அழுத்தத்தில் தவிக்கும் மாணவர்கள் தேர்வை எதிர்கொள்வது எப்படி : ஜே.இ.இ, நீட் தேர்வுகளை ஒத்திவைக்க பிரதமர் மோடிக்கு கடிதம்!!

 கொரோனா காலத்தில் அதிக மன அழுத்தத்தில் தவிக்கும் மாணவர்கள் தேர்வை எதிர்கொள்வது எப்படி : ஜே.இ.இ, நீட் தேர்வுகளை ஒத்திவைக்க பிரதமர் மோடிக்கு கடிதம்!!

ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வுகளை ஒத்திவைக்குமாறு மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.கொரோனா காலத்தில் அதிக மன அழுத்தத்தில் தவிக்கும் மாணவர்கள் தேர்வை எதிர்கொள்வது எப்படி என்று சவுத்ரி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.செப்டம்பரில் நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள்


நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வுகள் முகமை என்ற அமைப்பு தனியாக உருவாக்கப்பட்டு இந்த ஆண்டு முதல் நீட் தேர்வுகளை நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 3ம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. 

ஆனால், கொரோனா நோய் தொற்று காரணத்தினால் தள்ளி வைக்கப்பட்ட நீட் தேர்வை வரும் செப்டம்பர் 13ம் தேதியும், அதேப்போல் ஜே.இ.இ தேர்வு செப்டம்பர் 1 முதல் 6ம் தேதி வரை நடத்தப்படும் என கடந்த மாதம் தேர்வு முகமை அமைப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


உச்சநீதிமன்றத்தில் மனு


இந்த நிலையில் கேரளா உட்பட நாடு முழுவதிலும் உள்ள 11 மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 6ம் தேதி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில்,”செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, கொரோனா நோய் தொற்று முழுவதுமாக கட்டுக்குள் வந்த பிறகு தேர்வை நடத்த வேண்டும். மேலும் இதுகுறித்து கடந்த ஜூலை 3ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையையும் ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.’’ என குறிப்பிட்டிருந்தனர்.


அனைத்து மனுக்களும் தள்ளுபடி


இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. அதில், எந்த ஒரு நிலையிலும் வாழ்க்கையின் ஓட்டத்தோடு நாம் பயணிக்க தயாராக இருக்க வேண்டும். தேர்வு நடைமுறைகளில் நீதிமன்றம் தலையீடு செய்வது என்பது மாணவர்களின் எதிர்காலத்தை கண்டிப்பாக பாதிக்கும் என்பதால், நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்ய உத்தரவிட முடியாது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்து, மாணர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.


பிரதமர் மோடிக்கு கடிதம்


இந்த நிலையில்  மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்,கொரோனா தொற்று அச்சத்தில் இருந்து நாட்டு மக்கள் இன்னுமும் மீளவில்லை

. இதில் மாணவர்களும் விதிவிலக்கு கிடையாது. இந்தியாவில் தினசரி சுமார் 60,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி வரும் நிலையில், சுமார் 25 லட்சம் மாணவர்கள் எப்படி நிம்மதியாக தேர்வு எழுத முடியும். கொரோனா காலத்தில் அதிக மன அழுத்தத்தில் தவிக்கும் மாணவர்கள் தேர்வை எப்படி எதிர்கொள்வார்கள். 

அதனால் செப்டம்பர் மாதம் நடத்தப்படுவதாக தேசிய தேர்வு முகமை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை இந்த இக்கட்டான சூழல் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒத்திவைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 இந்த கோரிக்கை என்பது பிரதமரால் பரிசீலனை செய்யப்படும் பட்சத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக ஏதேனும் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment