மாணவர்கள் மதிப்பெண் சார்ந்த குறைகள் இருந்தால் விண்ணப்பிக்கலாம்: வழிகாட்டல் வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, August 10, 2020

மாணவர்கள் மதிப்பெண் சார்ந்த குறைகள் இருந்தால் விண்ணப்பிக்கலாம்: வழிகாட்டல் வெளியீடு

 மாணவர்கள் மதிப்பெண் சார்ந்த குறைகள் இருந்தால் விண்ணப்பிக்கலாம்: வழிகாட்டல் வெளியீடு

10 ம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவர்கள், தங்கள் மதிப்பெண்களில் ஏதேனும் சந்தேகங்கள், குறைகள் இருப்பின் தலைமை ஆசிரியர் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஆக. 10) காலை 9.30 மணிக்கு வெளியியாகின. இதில் 100 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்


கரோனா காரணமாகப் பொதுத் தேர்வுகள் நடைபெறாததால் இந்த ஆண்டு பள்ளி அளவில் நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் மறுகூட்டல் வாய்ப்பிற்குப் பதிலாக, தங்களுக்கு மதிப்பெண் சார்ந்த குறைகள் ஏதேனும் இருப்பின் நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கு, மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் வாயிலாகக் குறைதீர்க்கும் படிவத்தினைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதைக்கொண்டு பள்ளித் தலைமையாசிரியர் வாயிலாக இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


குறிப்பாக, www.dge.tn.gov.in என்ற அரசுத் தேர்வுத் துறை இணையதளம் மூலம் ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 25-ம் தேதி வரையிலான நாட்களில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.


மாணவர்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் வாயிலாக முடிவுகள் மாணவர்களுக்குத் தெரிவிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

4 comments:

  1. Sir anaku mark romba commiya irruku

    ReplyDelete
  2. Na konjam topper yanaku Mark kami but principal daughter in law ku principal Mark topper pothu irukaga
    School first number he was average

    ReplyDelete
  3. Ennakku romba mark kammiya vandhurrukku

    ReplyDelete
  4. Enga schoola mark ellarukum neraya potu irukaga fail aagura pasagalauku ellam 450 ku Mela potu irukaga

    ReplyDelete