யோகா மருத்துவ படிப்பு விண்ணப்பிக்க அவகாசம் - Minnal Kalvi Seithi

Breaking

Monday, August 31, 2020

யோகா மருத்துவ படிப்பு விண்ணப்பிக்க அவகாசம்

 யோகா மருத்துவ படிப்பு விண்ணப்பிக்க அவகாசம்

இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க, வரும் 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கு, சென்னை அரும்பாக்கம் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுாரியில், 60 இடங்களும்; ஒன்பது தனியார் கல்லுாரிகளில், 600க்கும் மேற்பட்ட இடங்களும் உள்ளன. தனியார் கல்லுாரிகளில் இருந்து அரசுக்கு, 65 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இந்த பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம், ஆக., 3ல் துவங்கியது. விண்ணப்பத்தை, www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில், ஆக., 28 வரை பதிவிறக்கம் செய்யவும், ஆக., 31 வரை சமர்ப்பிக்கவும், அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.


தற்போது, விண்ணப்பத்தை பதிவிறக்க, வரும் 12ம் தேதி மாலை, 5:00 மணி வரையும்; சமர்ப்பிக்க, வரும், 15ம் தேதி வரையும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment