டெல்லி பல்கலை.யில் முதல்முறையாக இணையத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு திறந்த புத்தகத் தேர்வு - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, August 11, 2020

டெல்லி பல்கலை.யில் முதல்முறையாக இணையத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு திறந்த புத்தகத் தேர்வு

 டெல்லி பல்கலை.யில் முதல்முறையாக இணையத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு திறந்த புத்தகத் தேர்வு

கரோனா பெருந்தொற்றால் டெல்லி பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக இணைய வழியில் திறந்த புத்தகத் தேர்வு நடைபெற்றது. இதில் தொழில்நுட்பப் பிரச்சினையால் மாணவர்கள் குழப்பத்துக்கு ஆளாகினர்.


கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் இறுதியாண்டு மாணவர்களைத் தவிர அனைத்து மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் செமஸ்டர் தேர்வை நடத்துமாறு மத்தியக் கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


இந்நிலையில், டெல்லி பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக இணையவழியில் திறந்த புத்தகத் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளைப் படிக்கும் இறுதியாண்டு மாணவர்கள் சுமார் 35 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்


3 ஷிஃப்டுகளில் தேர்வு நடைபெற்றது. காலை 7.30 முதல் 11.30 மணிவரை முதல் ஷிஃப்டும், 11.30 மணி முதல் மதியம் 3.30 மணி வரை அடுத்த ஷிஃப்டும் 3.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை மூன்றாவது ஷிஃப்டும் நடைபெற்றது. இந்தத் தேர்வு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது.


இரண்டு மணி நேரம் தேர்வுக்கும் ஒருமணி நேரம் விடைத்தாள்களை ஸ்கேன் செய்து பதிவேற்றவும் வழங்கப்பட்டது. இதற்கிடையே இன்று நடைபெற்ற தேர்வில் விடைத்தாள்களைப் பதிவேற்றுவதில் தொழில்நுட்பப் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் தங்களின் விடைத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதா என்பது தெரியாமல் மாணவர்கள் குழப்பத்துக்கு ஆளாகினர்.


கரோனா பெருந்தொற்று காலத்தில் இணைய வழியில் திறந்த புத்தகத் தேர்வு நடைமுறை ஒரு முறை மட்டுமே இருக்கும் என்று டெல்லி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment