செமஸ்டர் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பெயர் கல்லூரிகளில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படும்!: அண்ணா பல்கலை. எச்சரிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, August 18, 2020

செமஸ்டர் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பெயர் கல்லூரிகளில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படும்!: அண்ணா பல்கலை. எச்சரிக்கை

 செமஸ்டர் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பெயர் கல்லூரிகளில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படும்!: அண்ணா பல்கலை. எச்சரிக்கை

செமஸ்டர் தேர்வுக்கு பணம் கட்டாத மாணவர்களின் பெயர் கல்லூரிகளில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படும் என்று அண்ணா பல்கலைக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 4 மாதங்களாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. 

இந்த சூழ்நிலையில் அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகள் மூடப்பட்டு தற்போது, அண்ணா பல்கலைக் கழகத்தின் வளாக கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

 அதாவது சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழக கிண்டி வளாகம், அதேபோல குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. வளாகம் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அண்ணா பல்கலைக் கழகம் மாணவர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

அதில் செமஸ்டர் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் கல்லூரிகளில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் 30-க்குள் கட்டணத்தை முழுமையாக செலுத்த வேண்டும். 

அவ்வாறு இல்லையெனில் செப்டம்பர் 5ம் தேதிக்குள் அபாரதத்துடன் மாணவர்கள் செமஸ்டர் கட்டணத்தை செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் மாணவர்களின் பெயர்கள் கல்லூரில் இருந்து 7ம் தேதியன்று நீக்கப்பட்டுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஏற்கனவே கல்லூரிகள் மாணவர்களின் கட்டணத்தை நிர்பந்தித்து பெறக்கூடாது என அரசின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில்,அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய அண்ணா பல்கலைக் கழகம், இத்தகைய உத்தரவை பிறப்பித்திருப்பது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவர்கள் பல்கலைக் கழக துணை வேந்தர் மற்றும் பதிவாளருக்கு இது சம்பந்தமாக கடிதங்களையும் அனுப்பியிருக்கின்றார்கள். 

ஆனால் இதுவரை அது தொடர்பாக எந்தவித பதிலும் கிடைக்காததால் கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களின் நிலை என்னவாகும் என்பது தற்போது கேள்வி குறியாக உள்ளது

No comments:

Post a Comment