டிப்ளமா படிப்புக்கு 'அட்மிஷன்' அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, August 14, 2020

டிப்ளமா படிப்புக்கு 'அட்மிஷன்' அறிவிப்பு

 டிப்ளமா படிப்புக்கு  'அட்மிஷன்' அறிவிப்பு

கல்வியியல் நிறுவனங்களில், டிப்ளமா படிப்பில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, நாளை மறுதினம் துவங்குகிறது.


மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், தொடக்க கல்வி ஆசிரியர் பணிக்கான டிப்ளமா ஆசிரியர் படிப்புக்கு, மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், டி.எல்.எட்., என்ற, படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், www.tnscert.org என்ற இணையதளத்தில், நாளை மறுதினம் முதல் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.


விண்ணப்ப விபரங்களையும், வரும், 28ம் தேதி மாலை, 5:00 மணி வரை பதிவேற்றலாம்.நிதி உதவி பெறும் நிறுவனங்கள், சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் படிக்க விரும்புவோர், அந்தந்த நிறுவனங்களின் இணையதளங்கள் வழியே விண்ணப்பிக்க வேண்டும். அந்த நிறுவனங்களின் இணையதள முகவரிகள், மேற்கண்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

1 comment:

  1. படிச்சவங்களுக்கு வேலை கொடுங்க அப்புறம்

    ReplyDelete