தந்தை இறப்பு தெரிந்தும் சுதந்திர தினவிழா அணிவகுப்பிற்கு தலைமையேற்ற பெண் இன்ஸ்பெக்டர் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, August 15, 2020

தந்தை இறப்பு தெரிந்தும் சுதந்திர தினவிழா அணிவகுப்பிற்கு தலைமையேற்ற பெண் இன்ஸ்பெக்டர்

 தந்தை இறப்பு தெரிந்தும் சுதந்திர தினவிழா அணிவகுப்பிற்கு தலைமையேற்ற பெண் இன்ஸ்பெக்டர்


திருநெல்வேலி வ.உ.சி.,மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழா போலீஸ் அணிவகுப்பை முன்னின்று நடத்தியவர் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி. இவரது கணவர் பாலமுருகன், திருநெல்வேலி மாநகர போலீஸ் நுண்ணறிவு பிரிவில் பணியாற்றுகிறார். மகேஸ்வரியின் தந்தை நாராயணசாமி 83, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் வசித்து வந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தவர் (14.08.2020) 10:00 மணியளவில் காலமானார்.


இன்ஸ்பெக்டர் மகேஸ்வரிக்கு தந்தை இறப்பு தகவல் (14.08.2020) இரவில் தெரியவந்தது. இருப்பினும் சுதந்திர தின விழா அணிவகுப்பை முன்னின்று நடத்தும் பொறுப்பேற்றிருப்பதால் அவரால் வேறு நபர்களை அதில் ஈடுபடுத்த முடியவில்லை. காலையில் கலெக்டர் ஷில்பா கொடியேற்றிவைத்து அணிவகுப்பு முடியும் வரையிலும் அதற்கு தலைமை வகித்த மகேஸ்வரி, விழா முடிந்ததும் அவசர அவசரமாக கண்ணீர் மல்க கிளம்பிச்சென்றார்.


தந்தை இறப்பு என முன்னரே தெரிந்த பிறகும் கூட எந்த மாற்றமும் இன்றி அணிவகுப்பை நடத்திய பிறகே கிளம்பிச்சென்ற மகேஸ்வரியை அதிகாரிகள் பாராட்டினர்.

No comments:

Post a Comment