கால்நடை மருத்துவப் படிப்புக்கு புதுச்சேரி சென்டாக்கில் விண்ணப்பிக்கலாம்
கால்நடை மருத்துவ படிப்பில் 40 இடங்களுக்கு புதுச்சேரியைச் சேர்ந்தோர் சென்டாக் இணையத்தில் விண்ணப்பிக்கலாம். அதே நேரத்தில், அகில இந்தியப் பிரிவில் 24 இடங்களும், என்.ஆர்.ஐ பிரிவில் 4 இடங்களும் நீட் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
புதுச்சேரி ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கால்நடை மருத்துவம், கால்நடை பராமரிப்பு (பிவிஎஸ்சி மற்றும் ஏஎச்) படிப்புக்கு மொத்தம் 80 இடங்கள் உள்ளன. இதில் புதுச்சேரி அரசு கோட்டாவில் 30 இடங்கள், புதுச்சேரி சுயநிதிப் பிரிவில் 10 இடங்கள் என மொத்தம் 40 இடங்களுக்கான சேர்க்கை, தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இருக்கும்.
அகில இந்திய ஒதுக்கீட்டில் 15 சதவீத இடங்களாக மொத்தம் 12 இடங்களும், அகில இந்திய அளவில் சுயநிதிப் பிரிவில் 12 இடங்களும், என்.ஆர்.ஐ பிரிவில் 4 இடங்களும், கோவாவைச் சேர்ந்தோருக்கு 5 இடங்களும் என மொத்தம் 33 இடங்கள், நீட் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படும்.
அந்தமான் நிகோபாரைச் சேர்ந்தோருக்கு ஐந்து இடங்கள் உண்டு. அதேபோல் பாரின் நேசனல் என்ற பிரிவில் இரு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்படுவோர் குறிப்பிட்ட காலத்துக்குள் கல்லூரியில் சேராவிட்டால் அவ்விடங்கள் என்ஆர்ஐ பிரிவுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கல்லூரி இணையத்தில் ஒவ்வொரு பிரிவுக்கும் கல்லூரிக் கட்டணம், விடுதிக் கட்டணம் தொடங்கி முழு விவரங்கள் தரப்பட்டுள்ளன.
கூடுதல் விவரங்களுக்கு: https://ragacovas.com/admission-procedure

No comments:
Post a Comment