மாநகர் போக்குவரத்துக் கழக ஐ.டி.ஐ.யில் சேர்க்கை பெற விண்ணப்பிக்கலாம் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, August 28, 2020

மாநகர் போக்குவரத்துக் கழக ஐ.டி.ஐ.யில் சேர்க்கை பெற விண்ணப்பிக்கலாம்

 மாநகர் போக்குவரத்துக் கழக ஐ.டி.ஐ.யில் சேர்க்கை பெற விண்ணப்பிக்கலாம்

மாநகர் போக்குவரத்துக் கழக தொழில் பயிற்சி நிறுவனத்தில் சேர்க்கை பெற மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


வெளி மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக மேலாண் இயக்குநர்  கோ. கணேசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கடந்த, 1984-ஆம் ஆண்டு முதல் தொழில் பயிற்சி நிறுவனம் (ஐடிஐ) கம்மியர் (மோட்டர் வாகனம்), மெக்கானிக், மத்திய அரசின் அங்கிகாரம் பெற்று குரோம்பேட்டையில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில், நாளதுவரையில் 1,207 மாணவர்கள், அனுபவம் வாய்ந்த பயிற்சி வல்லூநர்கள் மூலம் சிறந்த முறையில் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.


இங்கு பயிலும் மாணவர்களுக்கு போக்குவரத்துக் கழகங்களில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இந்நிறுவனங்களில் பயின்ற மாணவர்கள் பலர் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்கள்.


தொடக்கக்காலத்தில் குறைந்த அளவு இடங்களில், போக்குவரத்துத் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு மட்டும் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் மாணவர்களின் சேர்க்கைக்கு பணியாளர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கீடு தவிர, எஞ்சியுள்ள இடங்களுக்கு வெளி மாணவர்கள் சேர்க்கை அனுமதிக்கப்படுகிறது.


ஆண்டுதோறும் 72 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. நடப்பு ஆண்டு (2020) 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 பயிற்சி காலம் இரண்டு ஆண்டுகள். விண்ணப்பப் படிவங்களைப் பெறுவதற்கு " முதல்வர், மாநகர் போக்குவரத்துக் கழகத் தொழிற் பயிற்சி நிலையம், மாநகர் போக்குவரத்துக் கழக பயிற்சி நிலைய வளாகம், காந்தி நகர், குரோம்பேட்டை, சென்னை-600 044, தொலைபேசி எண். 044-29535177 / கைபேசி எண். 9445030597 " என்ற முகவரியில் அணுகவும். மின்னஞ்சல் முகவரி mtciti591@gmail.com


இந்த விண்ணப்ப படிவத்தினை www.mtcbus.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம். நேரிலும் பெற்றுக் கொள்ளலாம். மேலும், விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அளிக்க வேண்டிய கடைசி தேதி 30.09.2020 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment