நாசிக்கில் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பணி நிறுத்தி வைப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Monday, August 31, 2020

நாசிக்கில் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பணி நிறுத்தி வைப்பு

 நாசிக்கில் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பணி நிறுத்தி வைப்பு

நாசிக்கில் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் ஆலை ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பால், ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள ரூபாய் நோட்டு அச்சடிக்கும் தொழிற்சாலையில் கடந்த மூன்று மாதத்தில், 125 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர்.

 இந்நிலையில், கடந்த 2 வாரத்தில் மட்டும் 40 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பணி 4 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வரை இப்பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment