வெற்றிலை, பாக்கு வைத்து பள்ளி மாணவர் சேர்க்கை - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, August 30, 2020

வெற்றிலை, பாக்கு வைத்து பள்ளி மாணவர் சேர்க்கை

 வெற்றிலை, பாக்கு வைத்து  பள்ளி மாணவர் சேர்க்கை

அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் வீடுகளுக்கு சென்று, வெற்றிலை, பாக்கு தாம்பூலம் வைத்து, மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றனர்.


கொரோனா வைரஸ் பரவியதால், தமிழகத்தில்,மார்ச் மாதம் முதல், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. 1 முதல், 10ம் வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' போடப்பட்டது. 

ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மற்றும்10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, மார்க் சீட்கள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லுாரிகள் திறப்பு பற்றி, அரசு தரப்பில் அறிவிக்கா விட்டாலும், மாணவர்சேர்க்கை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. 


பெரம்பலுார் மாவட்டம், நாட்டார்மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது

. இப்பள்ளி தலைமை ஆசிரியை சுசிலா தலைமையிலான ஆசிரியர்கள், வெற்றிலை, பாக்கு தாம்பூலத்தட்டில், பள்ளியின் சிறப்புகள் குறித்த துண்டு பிரசுரத்தை வைத்து, மாணவர்களின் வீடுகளுக்கே சென்று, மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றனர்.'


இந்த நுாதன அணுகுமுறை, பெற்றோர் மட்டுமின்றி மாணவர்களிடமும், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 'அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சலுகைகள் பற்றி, மாணவர்களின் வீடுகளுக்கே சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதனால், மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது' என, பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment