பொறியியல் மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
இறுதியாண்டு தவிர்த்து பிற பொறியியல் மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடுவது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கரோனா சூழல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மற்ற வகுப்பு பொறியியல் மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடுவது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதில் குறிப்பாக பி.இ. மற்றும் பி.டெக். படிப்புகளில் செய்முறை மற்றும் செய்முறை அல்லாத பாடங்களில் மதிப்பெண் கணக்கிடப்படுவது குறித்துக் கூறப்பட்டுள்ளது. அதன்படி, ''செய்முறை அல்லாத பாடங்களில் முந்தைய செமஸ்டர் தேர்வு மதிப்பெண்களில் இருந்து 30% மதிப்பெண்ணும் அக மதிப்பீட்டு அடிப்படையில் 70% மதிப்பெண்ணும் வழங்க வேண்டும்.
முந்தைய செமஸ்டரில் அக மதிப்பீட்டுத் தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு தற்போது மீண்டும் தேர்வு நடத்தவேண்டும். திறந்த புத்தகத் தேர்வு அல்லது ஆன்லைன் வழியில் அவர்களுக்குத் தேர்வுகளை நடத்தலாம்.
செய்முறை வகுப்புகள் கொண்ட பாடங்களுக்கு, கடந்த செமஸ்டரில் நடத்தி முடிக்கப்பட்ட செய்முறைகளின்படி அடிப்படையில் 100% மதிப்பெண்ணுக்குக் கணக்கிட வேண்டும்'' என்று அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment