பல்கலை. இறுதியாண்டு தேர்வு வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று தீ்ர்ப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, August 27, 2020

பல்கலை. இறுதியாண்டு தேர்வு வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று தீ்ர்ப்பு

 பல்கலை. இறுதியாண்டு தேர்வு வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று  தீ்ர்ப்பு


கொரோனா பரவல் காரணமாக டில்லி, மஹாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்கள் கல்லூரி இறுதியாண்டு தேர்வை ரத்து செய்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் யு.ஜி.சி. தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று (ஆக.28) வெளியாகிறது.


கொரோனா வைரஸ் பிரச்னையை காரணமாக வைத்து, கல்லூரி இறுதியாண்டு தேர்வை, டில்லி, மஹாராஷ்டிரா, பஞ்சாப், ஒடிசா, அரியானா, மத்திய பிரதேசம், அரசுகள் ரத்து செய்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில், தேர்வு நடத்தாமல் வழங்கப்படும் பட்டங்களை அங்கீகரிக்க முடியாது' என, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானிய குழு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

இதை எதிர்த்து, மாணவர்கள் சிலர் தாக்கல் செய்த மனுவில் 'கொரோனா தாக்கம், இன்னும் குறையவில்லை. நெருக்கடியான நேரத்தில் தேர்வை நடத்துவது, மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்' என, அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இதற்கு பதில் அளித்த, யு.ஜி.சி., மற்றும் மத்திய அரசு, 'மாணவர்களின் கல்வி எதிர்காலத்தை பாதுகாக்க, இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை நடத்துவது அவசியம். தேர்வின் போது, போதிய சுகாதார நடவடிக்கைகள் பின்பற்றப்படும்' என, தெரிவித்திருந்தது

. யு.ஜி.சி., சார்பில் ஆஜரான, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடினார். மாணவர்கள் சார்பில் வழக்கறிஞர் அலோக் ஸ்ரீவத்சவா ஆஜரானார்.இந்த வழக்கினை விசாரித்த வரும் நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான நீதிபதிகள் கொண்டஅமர்வு இன்று(ஆக.28) தீர்ப்பளிக்கிறது.

No comments:

Post a Comment