இளம் விஞ்ஞானி’ பயிற்சி முகாம் ரத்து: இஸ்ரோ அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, August 28, 2020

இளம் விஞ்ஞானி’ பயிற்சி முகாம் ரத்து: இஸ்ரோ அறிவிப்பு

 இளம் விஞ்ஞானி’ பயிற்சி முகாம் ரத்து: இஸ்ரோ அறிவிப்பு


பள்ளி மாணவர்களுக்கான இளம் விஞ்ஞானி திட்டப்பயிற்சி முகாம் ரத்து செய்யப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ​​


பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ‘யுவிகா’ என்றஇளம் விஞ்ஞானி திட்டத்தை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இதன்மூலம் மாணவர்களுக்கு விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் மற்றும் செய்முறை விளக்கப் பயிற்சிகளும் அளிக்கப்படும்


இதற்காக நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 3 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி நடப்பு ஆண்டு‘யுவிகா’ பயிற்சி இஸ்ரோவின் 4 மையங்களிலும் கடந்த மே 11 முதல் 22-ம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ​​


இந்த பயிற்சி முகாமில் பங்கேற்க 1.52 லட்சம் பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதில்இருந்து தகுதியான 113 மாணவர்களை ‘யுவிகா’ பயிற்சிக்கு தேர்வு செய்யும் பணியில் இஸ்ரோ குழு ஈடுபட்டிருந்தது. இதற்கிடையே கரோனா தொற்றால் பயிற்சி தள்ளிவைக்கப்பட்டது


இந்நிலையில் தொற்றின் தீவிரம் தணியாததால் ‘யுவிகா’சார்ந்த பணிகளை திட்டமிட்டபடிமேற்கொள்வதில் சிரமம் இருப்பதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக இந்த ஆண்டுக்கான ‘யுவிகா’ பயிற்சி ரத்து செய்யப்படுவதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், கூடுதல் விவரங்களை www.isro.gov.in என்ற இணையதளத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment