ஆன்லைன் கல்வி: மரத்தில் அமர்ந்து பாடம் எடுக்கும் ஆசிரியர் - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, August 20, 2020

ஆன்லைன் கல்வி: மரத்தில் அமர்ந்து பாடம் எடுக்கும் ஆசிரியர்

 ஆன்லைன் கல்வி: மரத்தில் அமர்ந்து பாடம் எடுக்கும்  ஆசிரியர்

இணைய வசதி இல்லாததால் மரத்தின் மீது ஏறி அமர்ந்து தனது மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் எடுக்கும் காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பள்ளிகள், கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் இணைய வழி வகுப்புகளை நடத்தி வருகின்றன

இந்நிலையில் போதுமான இணைய வசதி இல்லாமல் மாணவர்கள் வகுப்புகளில் கலந்து கொள்ள முடிவதில்லை என விமர்சனம் எழுந்துள்ளது. மாணவர்களை வகுப்புகளில் பங்கெடுக்க வைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


அந்த வகையில் மகாராஷ்டிர மாநிலம்  நந்தூர்பார் மாவட்டத்தின் தட்கான் கிராமத்தில் உள்ள  ஆசிரியர் லக்‌ஷ்மண் பவார் தனது மாணவர்களுக்கு இணையவழியில் பாடம் எடுத்து வந்துள்ளார். ஆனால் போதுமான இணைய வசதி இல்லாததால் தவித்த அவர் தற்போது கிராமத்தில் உள்ள ஒரு மரத்தின் மேல் அமர்ந்து பாடம் எடுக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.


இதுகுறித்து நாசிக் கல்வித்துறை இணை இயக்குநர் பிரவின் பட்டீல், ஆசிரியர் லக்‌ஷ்மண் பவார் வசிக்கும் பகுதியில் போதிய அளவிலான செல்போன் கோபுரம் இல்லாததால் இந்த சிக்கல் நீடிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment