D.T.Ed முடித்தவர்களுக்கு வேலை இல்லை - 5 ஆண்டுகளில் 386 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, August 26, 2020

D.T.Ed முடித்தவர்களுக்கு வேலை இல்லை - 5 ஆண்டுகளில் 386 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடல்

 D.T.Ed முடித்தவர்களுக்கு வேலை இல்லை - 5 ஆண்டுகளில் 386 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடல்


ஆசிரியர் பட்டய பயிற்சி (D.T.Ed) முடித்தவர்களுக்கு வேலை கிடைக்காத காரணத்தால் கடந்த 5 ஆண்டுகளில் 386 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் மூலம் இடைநிலை ஆசிரியர்களுக்கு தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சி நிறுவனத்தில் சேர்வதற்கு 12 ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றால் போதுமானது.


தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் ஆண்டு தோறும் மிகவும் குறைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2015-ம் ஆண்டில் 478 ஆக இருந்த அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் எண்ணிக்கை 2017ல் 360 ஆக குறைந்தது. இரண்டே ஆண்டுகளில் 118 நிறுவனங்கள் மூடப்பட்டது.


தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் ஆண்டு தோறும் மிகவும் குறைந்து வருவதே இதற்கான காரணம்.


மேலும் தேசிய ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் உத்தரவின் அடிப்படையில் 30 சதவீதம் மாணவர்கள் சேர்க்கைக்கு குறைவாக இருக்கும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டு இருந்தது. அந்த வகையில் இந்த ஆண்டு 62 அரசு உதவிப்பெறும் மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது


6 முதல் 8 ம் வகுப்பு வரையிலும் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக மாற்றப்பட்டு வருவதும் அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து சரிந்து வரும் மாணவர் சேர்க்கையும் தொடக்க கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக உள்ளதாலும் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாத நிலைக்கு காரணமாக உள்ளது.


மேலும் மத்திய அரசின் குழந்தைகளுக்கான இலவச கட்டயாக் கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஆசிரியராக பணியாற்றுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டதும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட காரணமாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment