லாட்டரியில் கோயில் ஊழியருக்கு 12 கோடி பரிசு - Minnal Kalvi Seithi

Breaking

Monday, September 21, 2020

லாட்டரியில் கோயில் ஊழியருக்கு 12 கோடி பரிசு

 லாட்டரியில் கோயில் ஊழியருக்கு 12 கோடி பரிசு


கேரள அரசின் திருவோண பம்பர் லாட்டரியின் முதல் பரிசான ₹12 கோடி எர்ணாகுளத்தை சேர்ந்த கோயில் ஊழியருக்கு கிடைத்துள்ளது.ேகரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் அனந்து விஜயன் (24). இவர் இடுக்கி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். 


அனந்து விஜயன் எர்ணாகுளத்தில் உள்ள ஏலம்குளம் கோயிலில் பணிபுரிந்து வருகிறார். இவர் கேரள அரசின் திருவோண லாட்டரி டிக்கெட் வாங்கி இருந்தார்


.இந்த நிலையில் இந்த லாட்டரிக்கான குலுக்கல் நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது.


 இதில் கேரள மாநில லாட்டரியின் திருவோணம் பம்பர் பரிசு ₹12 கோடியை அனந்து விஜயன் வென்றுள்ளார். ₹12 கோடியில் 10 சதவீத ஏஜென்சி கமிஷன் மற்றும் 30 சதவீத வருமான வரியையும் கழித்தால், அனந்து விஜயனுக்கு ₹7.56 கோடி கிடைக்கும்.


எர்ணாகுளம் அருகே ஐயப்பன்காவு லாட்டரி ஏஜென்சி மூலம் விற்கப்பட்ட ‘டிபி 173964’ என்ற எண் கொண்ட டிக்கெட்தான் அனந்து விஜயனுக்கு புதியதோர் வாழ்க்கையை கொடுத்துள்ளது.


 அனந்து விஜயன் பலமுறை லாட்டரி டிக்கெட் எடுத்து வந்தபோதும், இதுவரை அவர் வென்ற மிகப்பெரிய பரிசு ₹5,000 தான்.தனக்கு பம்பர் பரிசு கிடத்ததை தொடர்ந்து, அந்த லாட்டரி சீட்டை அருகில் உள்ள ஒரு வங்கியில் அனந்து விஜயன் டெபாசிட் செய்துள்ளார்

No comments:

Post a Comment