இணையவழி பிஎஸ்சி படிப்புக்கு செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: சென்னை ஐஐடி அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, September 6, 2020

இணையவழி பிஎஸ்சி படிப்புக்கு செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: சென்னை ஐஐடி அறிவிப்பு

 இணையவழி பிஎஸ்சி படிப்புக்கு செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: சென்னை ஐஐடி அறிவிப்பு

சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ள இணையவழி பிஎஸ்சி பட்டப்படிப்புக்கு செப்.15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை ஐஐடி உருவாக்கியுள்ள பிஎஸ்சி (ஆன்லைன் புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ்)இணையவழிப் பட்டப்படிப்பு 2020-21-ம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.


ஐஐடியில் பட்டப்படிப்பு பயிலஜேஇஇ என்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வை மாணவர்கள் எழுதவேண்டும். ஆனால், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிஎஸ்சி இணையவழி பட்டப்படிப்புக்கு ஜேஇஇ தேர்வு எழுத வேண்டியதில்லை


இந்த இணையவழி பட்டப்படிப்பானது, அடிப்படைப் பட்டம், டிப்ளமோ பட்டம், இளநிலைப் பட்டப்படிப்பு என மூன்று நிலைகளை கொண்டுள்ளது. அதாவது,மூன்று நிலைகளில் எந்த கட்டத்திலும் மாணவர்கள் வெளியேறி, அதற்கான சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.


மேலும், பிற கல்லூரிகளில் வேறு பிரிவுகளில் பட்டப்படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்கள், ஐஐடியில் பட்டப்படிப்பைத் தொடர முடியும். இதற்கு விருப்பமுள்ள மாணவர்கள் செப்டம்பர் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சென்னை ஐஐடி அறிவித்துள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.onlinedegree.iitm.ac.in என்ற இணையதளம் மூலம்மாணவர்கள் அறிந்து கொள்ள லாம்.

No comments:

Post a Comment