2018-19 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு அபராதத்துடன் தாக்கல் செய்ய செப். 30 கடைசி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, September 24, 2020

2018-19 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு அபராதத்துடன் தாக்கல் செய்ய செப். 30 கடைசி

 2018-19 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு அபராதத்துடன் தாக்கல் செய்ய செப். 30 கடைசி


கடந்த 2018-19-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை அபராதத்துடன் தாக்கல் செய்ய கால அவகாசம் செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குள் கணக்கு தாக்கல் செய்ய வருமான வரி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்


கடந்த 2018- 19-ஆம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் 2019-ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கியது. ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் உச்சவரம்பை தாண்டும் அனைவரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.


வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, வருமானவரி உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் என்பது கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டது.


அபராதம் செலுத்தி, கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிகழாண்டில் மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.


இதற்கிடையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக அபராதம் செலுத்தி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் செப்டம்பா் வரை நீட்டிக்கப்பட்டது.


தற்போது அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

No comments:

Post a Comment