செப்.24 முதல் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான நெட் தேர்வு: தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, September 15, 2020

செப்.24 முதல் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான நெட் தேர்வு: தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு

செப்.24 முதல் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான நெட் தேர்வு: தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு


கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான நெட் தேர்வு செப்.24-ம் தேதி முதல் நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


ஆண்டுதோறும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில், பல்வேறு உயர்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசியத் தகுதித் தேர்வு (நெட்) ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாத இறுதியில் நடக்கிறது.

இதற்கிடையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், மத்திய அரசு நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவைப் பிறப்பித்தது. இதையடுத்து, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வகை நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் தேர்வு தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டது.


இந்நிலையில் தற்போது கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான நெட் தேர்வு செப்.24-ம் தேதி முதல் நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.

இது தொடர்பாக என்டிஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இளங்கலை மற்றும் முதுகலை AIEEA தேர்வுகள், AICE-JRF/SRF (PhD) தேர்வுகள் செப்.16, 17, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன. இத்தேர்வுகளை எழுதும் மாணவர்களில் சிலர் நெட் தேர்வை எழுதுவதால், செப்.24 முதல் நெட் தேர்வு நடைபெற உள்ளது.

பாடவாரியான அட்டவணை மற்றும் நேர அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்டிஏ வெளியிட்டுள்ள அறிவிப்பை முழுமையாகக் காண இங்கே கிளிக் செய்யவும்:

No comments:

Post a Comment