புதிய கல்விக் கொள்கை குறித்த இணைய வழிப் போட்டிகள்: அக்.2 வரை பங்கேற்கலாம் - Minnal Kalvi Seithi

Breaking

Monday, September 28, 2020

புதிய கல்விக் கொள்கை குறித்த இணைய வழிப் போட்டிகள்: அக்.2 வரை பங்கேற்கலாம்

 புதிய கல்விக் கொள்கை குறித்த இணைய வழிப் போட்டிகள்: அக்.2 வரை பங்கேற்கலாம்புதிய கல்விக் கொள்கை குறித்த இணைய வழிப் போட்டிகளில், அக்.2-ஆம் தேதி வரை மாணவா்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலா் ரஜினிஷ் ஜெயின், அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: நாடு முழுவதும் கடந்த ஜூலை 29-ஆம் தேதி முதல் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. 


இது தொடா்பான விழிப்புணா்வுப் பணிகளை முன்னெடுக்க ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது. இதுதவிர மத்திய கல்வித்துறை சாா்பிலும் பல்வேறு இணையவழி கருத்தரங்குகள்  நடத்தப்பட்டு வருகின்றன.


இதன்தொடா்ச்சியாக மீரட் நகரிலுள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகம், கல்விக்கொள்கை தொடா்பாக  தேசியளவில் கட்டுரை, பிரதமருக்கு கடிதம் எழுதுதல்,  கவிதை, குறும்படம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை இணையவழியில் நடத்தி வருகிறது. 


இந்தப் போட்டிகளில் மாணவா்கள், கல்வியாளா்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் இணையதளம் வழியாக அக்டோபா் 2-ஆம் தேதி வரை  பங்கேற்கலாம். 13 தேசிய மொழிகளில் போட்டிகள் நடத்தப்படும். வெற்றி பெறுபவா்களுக்கு பரிசுத் தொகையுடன் சான்றிதழும் வழங்கப்படும்.


 எனவே, அனைத்து உயா்கல்வி நிறுவனங்களும் தங்கள் மாணவா்கள், ஆசிரியா்களுக்கு இந்தத் தகவலை தெரிவித்து போட்டிகளில் பங்கேற்க எடுத்துரைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment