நவம்பர் 2 முதல் இம்மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, September 30, 2020

நவம்பர் 2 முதல் இம்மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

 நவம்பர் 2 முதல் இம்மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு


ஆந்திரப் பிரதேசத்தில் பள்ளிகள் அனைத்தும் நவம்பர் 2-ம் தேதி முதல் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.


இது தொடர்பாகக் காணொலிக் காட்சி மூலம் அதிகாரிகளிடம் நேற்று மாலை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆலோசனை நடத்தினார்.


அதைத் தொடர்ந்து அவர் கூறும்போது, ''கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு அக்டோபர் 5-ம் தேதி அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படுவதாக இருந்தது.


 அன்றைய தினமே மாணவர்களுக்கு 3 செட் சீருடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுகள், காலணிகள், சாக்ஸ், பெல்ட், பள்ளிப் பை ஆகியவை வழங்கவும் திட்டமிடப்பட்டு இருந்தது.


ஆனால், கரோனா பரவல் அதிகரிப்பைத் தொடர்ந்து பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


 மீண்டும் பள்ளிகள் அனைத்தும் நவம்பர் 2-ம் தேதி முதல் திறக்கப்படும். எனினும் அக்.5-ம் தேதி பாடப் புத்தகம் மற்றும் பள்ளி சார்ந்த உபகரணங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி மாணவர்களுக்கு வழங்கப்படும்


நடு நெடு' திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 15,715 பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 


இதில், 15,562 பள்ளிகளில் பணிகள் தொடக்கி நடைபெற்று வருகின்றன. வேலைகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.


 தினந்தோறும் இணை ஆட்சியர்கள் பணிகளைக் கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்'' என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.

No comments:

Post a Comment