40%-க்கும் மேல் கட்டணம் வசூலித்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு:  - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, September 2, 2020

40%-க்கும் மேல் கட்டணம் வசூலித்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு: 

 40%-க்கும் மேல் கட்டணம் வசூலித்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு: 

தமிழகத்தில் 40%-க்கும் மேல் கட்டணம் வசூலித்த பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் உரிய அறிக்கையை நாளைக்குள் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


தமிழகத்தில் தற்போது கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் முறைக்கு மாறியுள்ளன. மேலும் தனியார் பள்ளிகள் இயங்காத நிலையில், 100% கட்டணத்தை உடனடியாக கட்டுமாறு வந்த புகாரின் அடைப்படையில், இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது. 

இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி, தனியார் பள்ளிகள் கட்டணம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 100 சதவீத கட்டணத்தை வசூலிக்கும் பள்ளிகளின் பட்டியலை தாக்கல் செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


இதன் தொடர்ச்சியாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த தனியார் பள்ளிகள் பெற்றோர்களை 100% கட்டணத்தை வசூலிக்க வற்புறுத்தினர் என ஒரு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய,

 அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கும் உத்தரவானது பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் எத்தனை பள்ளிகள் இவற்றில் ஈடுபட்டார்கள் என்பது தொடர்பான சரியான தகவலானது பள்ளிக்கல்வித்துறை தரப்பில் கொடுக்கப்படவில்லை.

 இதன் தொடர்ச்சியாக வரும் செப்டம்பர் 7ம் தேதி பள்ளி கல்வித்துறை செயலாளர் காணொளி காட்சி மூலமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் நேரடி வழக்கில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதனால் தற்போது இந்த விவகாரமானது சூடுபிடித்துள்ளது. இதற்கிடையில் பெற்றோர்கள் நேரடியாக பள்ளிக்கல்வித்துறைக்கு புகார் அனுப்பினால், இதுதொடர்பாக  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்றைய தினம் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார். இந்த நிலையில், எதெந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தொடர்பான விரிவான தகவலானது தற்போது திரட்டப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment