தென்காசி மாவட்டத்தில் 414 சத்துணவுப் பணியிடங்கள் காலி: பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, September 28, 2020

தென்காசி மாவட்டத்தில் 414 சத்துணவுப் பணியிடங்கள் காலி: பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு

 தென்காசி மாவட்டத்தில் 414 சத்துணவுப் பணியிடங்கள் காலி: பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு



தென்காசி மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 148 சத்துணவு அமைப்பாளர், 77 சமையலர், 189 சமையல் உதவியாளர் என காலியாக உள்ள 414 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது.


சத்துணவு அமைப்பாளர் பணிக்கு பொதுப் பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோர் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்திருக்க வேண்டும்


சமையலர் பணிக்கு பொதுப் பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோர் 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்திருக்க வேண்டும். பழங்குடியினர் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமையல் உதவியாளர் பணிக்கு பொதுப் பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்திருக்க வேண்டும்.


பழங்குடியினர் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். அனைத்து பணியிடங்களுக்கும் பொதுப் பிரிவு, தாழ்த்தப்பட்டோர் 21 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பழங்குடியினர் 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.


விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். சத்துணவு அமைப்பாளர் பணிக்கு மாற்றுத்தினளாளிகள் 43 வயதுக்குள் இருக்க வேண்டும்.


சமையலர், சமையல் உதவியாளர் பணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை.


நியமன பணியிடத்துக்கும், விண்ணப்பதாரர் குடியிருப்புக்கும் இடையே உள்ள தூரம் 3 கிலோமீட்டருக்குள் இருக்க வேண்டும் (ஊராட்சி, குக்கிராமம், வருவாய் கிராமம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது).


அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு இன சுழற்சி முறை பிற்பற்றப்பட மாட்டாது. ஊராட்சி ஒன்றியம், நகராட்சிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளுக்கு இனச் சுழற்சி பிப்பற்றப்படும்.


இன சுழற்சி அல்லாத மற்றும் இன சுழற்சி முறையிலான இட ஒதுக்கீட்டின்படி நிரப்பப்பட உள்ள மொத்த பள்ளி சத்துணவு பணியாளர்கள் காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை மற்றும் மாதிரி விண்ணப்ப படிவம் www.tirunelveli.nic.in என்ற இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம், நகராட்சி அலுவலக விளம்பரப் பலகையிலும் அறிவிக்கப்படும்


விண்ணப்ப படிவத்துடன் கல்விச் சான்று, வயதுச் சான்று, இருப்பிடச் சான்று, ஜாதிச் சான்று, முன்னுரிமை தகுதிகளுக்கான சான்று ஆகியவற்றின் நகல்களுடன் வருகிற 3-ம் தேதி வரையிலான நாட்களில் வேலை நாட்களில் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம், நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.


இருப்பிடச் சான்றுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வருவாய்த்துறை சான்று, ஆதார் அட்டை ஆகிய ஏதாவது ஒரு சான்றை இணைக்கலாம். இந்த பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment