5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தம்:அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, September 9, 2020

5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தம்:அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தம்:அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு


5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தம் செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு படிப்படியாக தளர்ப்பட்டு வருகிறது. கடந்த 1ம் தேதி முதல் நான்காம் கட்ட  ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அமல்படுத்தியது.

அப்போது, 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பாட சந்தேகங்களை ஆசிரியர்கள் கேட்டு தெரிந்து கொள்ள, வரும் 21ம் தேதியிலிருந்து நாடு முழுவதும் பள்ளிகளை திறக்கலாம் என  அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

இதற்கிடையே, கொரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டதால், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.


இருப்பினும், ஆன்லைன் மூலம் நடத்தப்படும் பாடங்கள் புரியதா  காரணத்தினாலும், போதிய இணைய வசதி, செல்போன்கள் இல்லாத காரணத்தினாலும், மாணவர்கள் தற்கொலை செய்யும் அபாயம் நிலவுகிறது.

தொடர்ந்து, பாடம் எடுப்பதால் மாணவர்களினின் மனநிலையில் மாற்றம் ஏற்படுவதாக  தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வரும் 21-ம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

 5 நாளிலும் ஆன்லைன்  வகுப்பு நடக்கிறதா? என்பது குறித்து பிளாக்லெவல் அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள்.


 மேலும் கொரோனா சூழ்நிலை இருப்பதால் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யவில்லை, கொரோனா பாதிப்பு குறைந்த பின்னர்தான் பள்ளிகள் திறப்பு  குறித்து முடிவு எடுக்கப்படும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக்கொள்கையை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

பகுதிநேர நூலங்களை முழுநேர நூலங்களாக மாற்றம் செய்யவது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை  மேற்கொள்ளப்படும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment