சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்த 7 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு இடம் தேர்வு செய்ய உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, September 12, 2020

சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்த 7 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு இடம் தேர்வு செய்ய உத்தரவு

சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்த 7 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு இடம் தேர்வு செய்ய உத்தரவு


சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்த 7 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு இடம் தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை, தஞ்சை, கோவை, திருச்சி, வேலூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அந்த சுற்றறிக்கையில் தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதன் படி, கோயம்புத்தூர் மாவட்டம் புலியகுளம் பகுதியல் ஒரு அரசு மகளிர் கல்லூரியும், கரூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், அரியலூர், நாகப்பட்டினம், விருதுநகர் ஆகிய இடங்களில் இருபாலர் பயிலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இந்த கல்வியாண்டே தொடங்க உள்ளன.

மேலும் இந்தாண்டு முதலே மாணவர் சேர்க்கையும் நடத்தியும் வகுப்புகளை தொடங்க மண்டல கல்வி இணை இயக்குநர்களுக்கு கல்லூரி கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.


புதிய கல்லூரிகளிலும் B.A. தமிழ், B.A. ஆங்கிலம், B.Com. B.Sc CS, B.Sc Maths உள்ளிட்ட 5 பாடப்பிரிவுகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. 5 மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர்களுக்கும் கல்லூரி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

 இந்த கல்வி ஆண்டிலேயே (2020-21) கல்லூரிகளை தொடங்க உள்ளதாக சுற்றறிக்கைகளில் இயக்குனர் தகவல் அளித்துள்ளார். கல்லூரி செயல்பட பொருத்தமான அரசு கட்டிடங்கள் அல்லது தனியார் கட்டிடங்களை கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment