யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, September 1, 2020

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு

 யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடுயுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. 


மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் 2020-21ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு மே 31 ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், பொது முடக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. 

இதையடுத்து, பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள்  அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கியத் தேர்வுகளை நடத்தும் பணி தொடங்கியுள்ளது. இன்று முதல் 6 ஆம் தேதி வரை ஜேஇஇ தேர்வும், செப்டம்பர் 13ல் நீட் தேர்வும் நடைபெற உள்ளன. 


இதையடுத்து, மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்தபடி, சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இதற்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள்  https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டு நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 


சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வு 2021 ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முதல் 5 நாள்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment