பள்ளி மாணவருக்கு இலவச பாடம் நடத்தும் பேராசிரியர் - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, September 1, 2020

பள்ளி மாணவருக்கு இலவச பாடம் நடத்தும் பேராசிரியர்

 பள்ளி மாணவருக்கு இலவச பாடம் நடத்தும் பேராசிரியர்

வடமதுரை அருகே பொறியியல் கல்லுாரி பேராசிரியர் ஒருவர் பள்ளி மாணவர்கள் கல்வி பயில கட்டணமின்றி தினமும் வகுப்பு நடத்தி வருகிறார்.


கொரோனா பிரச்னையால் கல்லுாரி, பள்ளிகள் மூடிக் கிடக்கின்றன. சில தனியார் பள்ளிகள் மட்டும் ஆன் லைனில் வகுப்புகளை நடத்துகின்றன. அரசு மற்றும் பல தனியார் பள்ளிகள் புத்தகங்களை வழங்கி &'டிவி&' வழியே அவர்களாகவே படித்து கொள்ள அறிவுறுத்தியுள்ளன.

 பல கிராமப்புற மாணவர்களுக்கு இவையும் எட்டாகனியாக உள்ளது. இதற்கிடையே சித்துவார்பட்டி வடுகபட்டியில் பள்ளி மாணவர்கள் கல்வி பயில தினமும் பாடம் நடத்தி உதவுகிறார் பொறியியல் கல்லுாரி பேராசிரியர் எஸ். முத்துபிரகாஷ் 27.


அவர் கூறியதாவது: 


பொறியியலில் சிவில் பிரிவில் முதுகலை முடித்து திண்டுக்கல் தனியார் கல்லுாரியில் பணிபுரிகிறேன். இங்கு பல்வேறு பள்ளிகளில் 12ம் வகுப்பு வரை படிக்கும் 30 மாணவர்கள் உள்ளனர். கொரோனா பிரச்னையால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருப்பதால், உள்ளூர் மாணவர்கள் கல்விக்கு உதவ நினைத்தேன்.

 இங்கு பயனற்ற அங்கன்வாடி மையத்தில் தினமும் வகுப்பறை போல உட்கார வைத்து கற்பிக்கிறேன். மாணவர்களும் அக்கறையுடன் படிக்கின்றனர். இதற்கு கட்டணம் வாங்கவில்லை. கிராமத்திற்கு சேவையாக செய்கிறேன்&' என்றார்.

No comments:

Post a Comment