'நீட்' போல செமஸ்டர் இறுதி தேர்வு: தனியார் கல்லூரிகள் வலியுறுத்தல் - Minnal Kalvi Seithi

Breaking

Monday, September 14, 2020

'நீட்' போல செமஸ்டர் இறுதி தேர்வு: தனியார் கல்லூரிகள் வலியுறுத்தல்

'நீட்' போல செமஸ்டர் இறுதி தேர்வு: தனியார் கல்லூரிகள் வலியுறுத்தல்

'நீட் தேர்வு போல், இந்தாண்டு, கல்லைரி இறுதி செமஸ்டர் தேர்வுகளையும் நேரடியாக நடத்த வேண்டும்; ஆன்லைனில் நடத்தும் முடிவை கைவிட வேண்டும்' என, மதுரை காமராஜ் பல்கலை தனியார் கல்லுாரி நிர்வாகிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


துணைவேந்தர் கிருஷ்ணனுக்கு, சங்கம் அனுப்பிய கடிதம்:

பல்வேறு பட்டப் படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வை, மதுரை காமராஜ், சென்னை அண்ணா, கோவை பாரதியார், காரைக்குடி அழகப்பா உள்ளிட்ட பல்கலைகள், 'ஆன்லைனில்' நடத்த முடிவு செய்துள்ளன

. உயர்கல்வி செயலர், துணைவேந்தர்களுடன் நடத்திய கூட்டத்தில், இம்முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, மாணவருக்கு, இணையதள வசதி வேண்டும். வினாத்தாள் மெயில் அல்லது, 'வாட்ஸ் ஆப்' மூலம் அனுப்பி, விடையை ஒரு மணி நேரத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தாமதம் ஏற்பட்டால் ஏற்கப்படாது. இணையதள வசதி இல்லாத மாணவர், விடைத்தாளை தபால் மூலம் கல்லைரிக்கு அனுப்ப வேண்டும் போன்ற வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.


 இவ்வாறு நடந்தால், காப்பி அடித்தல் உள்ளிட்ட முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. மாணவரை அடையாளம் காண்பதிலும் சிரமம். மின்தடை ஏற்பட்டால் என்ன செய்வது போன்ற நடைமுறை சிக்கலால் குழப்பம் ஏற்படும்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, செப்., 21 முதல் நேரடியாக தேர்வை நடத்துகிறது.

அதுபோல், இப்பல்கலையும் முடிவை எடுக்க வேண்டும்.தற்போதைய சூழலில், படித்த, கல்லுாரிக்கு செல்ல இயலாத மாணவர்கள், அவர்களது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள கல்லுாரியில் தேர்வு எழுதலாம்.


கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி, 'நீட்' தேர்வை, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர். அதுபோல், விதிமுறைகளை பின்பற்றி, எழுத்து முறை தேர்வாக நடத்த, கல்லூரிகள் தயாராக உள்ளன. அதற்கான வழிகாட்டுதல் முறையை வெளியிட வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment