அரசு ஊழியர்களின் விருப்ப மாறுதல் மற்றும் கோரிக்கை மாறுதல்களை அனுமதிக்கலாம்: நிதித் துறைக்கு அறிவுறுத்தல் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, September 18, 2020

அரசு ஊழியர்களின் விருப்ப மாறுதல் மற்றும் கோரிக்கை மாறுதல்களை அனுமதிக்கலாம்: நிதித் துறைக்கு அறிவுறுத்தல்

 அரசு ஊழியர்களின் விருப்ப மாறுதல் மற்றும் கோரிக்கை மாறுதல்களை அனுமதிக்கலாம்: நிதித் துறைக்கு அறிவுறுத்தல்அரசு ஊழியர்களின் விருப்ப மாறுதல், கோரிக்கை மாறுதல்களை அனுமதிக்கலாம் என நிதி துறைக்கு பணியாளர் நலன், நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர் அறிவுறுத்திஉள்ளார்.


தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொது மாறுதல், நிர்வாக மாறுதல், விருப்ப மாறுதல், கோரிக்கை அடிப்படையிலான மாறுதல் என பல்வேறு இடமாறுதல்கள் வழங்கப்படுகின்றன.


இந்நிலையில், கரோனா காரணமாக பொருளாதாரம் பாதிப்பு மற்றும் அரசு வருவாய் குறைந்துள்ளதால், அரசு தனது செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதன் காரணமாக, அரசு ஊழியர்களின் பொது மாறுதலை நிறுத்தி வைத்துள்ளது.


 அதேநேரம், நிர்வாகரீதியில் தேவைப் பட்டால் இடமாறுதல், விருப்பஇடமாறுதல் வழங்கலாம் என ஏற்கெனவே அனுமதித்திருந்தது.


இந்நிலையில், அரசுத்துறைகளின் செயலர்களுக்கு தமிழக பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர் ஸ்வர்ணா அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘‘2020-21-ம் நிதியாண்டில் பணியிட மாறுதல் தொடர்பான பயணச் செலவினங்களை குறைக்கும் நோக்கில், பொது மாறுதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 


அதேநேரம், நிர்வாக மாறுதல், விருப்ப மாறுதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது கோரிக்கை அடிப்படையிலான மாறுதல்களும் அனுமதிக்கப்பட்டுள்ளது.


 அதேநேரம், எதிர்காலத்தில் இவ்வாறான பணியிட மாறுதல்களால் நிர்வாகச் சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment