காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி: கலெக்டர் அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, September 27, 2020

காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி: கலெக்டர் அறிவிப்பு

 காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி: கலெக்டர் அறிவிப்பு


காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் ஏற்பாடு சார்பில் நடத்தப்படுகிறது.


 தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்போர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு 2020 ஆண்டுக்கானது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


மொத்தம் பணியிடங்கள் 10906. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.


 வயது வரம்பு 1.7.2020 தேதியில் பொதுப்பிரிவினருக்கு குறைந்த பட்சம் 18 அதிக பட்சம் 24 ஆகும்.


 விண்ணப்பிக்க கடைசி தேதி 26.10.2020. விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் உடன் துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், காஞ்சிபுரம் அவர்களை நேரிலோ அல்லது 044-27237124 என்ற அலுவலகத் தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு இலவச பயிற்சியில் சேர பெயரினை பதிவு செய்து கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment