ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, September 2, 2020

ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

 ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி


ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும். இந்த முறை விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப்பல்கலைக்கழகம் சென்னையை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் 5 ஆண்டுகால சட்டப்படிப்புக்கு 156 இடங்கள் உள்ளன. இதுதவிர பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 11 சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டுகால சட்டப்படிப்பில் 1,372 இடங்கள் உள்ளன.


இந்தநிலையில் நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கியது.


இந்தப் படிப்புக்கு தமிழகம் முழுவதும் மாணவா்கள் பலா் ஆா்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனா். 

இந்நிலையில் விண்ணப்பிக்கும் கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் (செப். 4) நிறைவடைகிறது. இந்த முறை கூடுதல் அவகாசம் வழங்கப்படாது. எனவே, விருப்பமுள்ள மாணவா்கள்  இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக சோ்க்கை குழுவினா் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment