முட்டை, சத்துணவு பொருட்கள் கிடைக்காத மாணவர்கள் புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் வெளியீடு - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, September 20, 2020

முட்டை, சத்துணவு பொருட்கள் கிடைக்காத மாணவர்கள் புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் வெளியீடு

 முட்டை, சத்துணவு பொருட்கள் கிடைக்காத மாணவர்கள் புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் வெளியீடு


முட்டை, உலர் உணவுப் பொருட் கள் கிடைக்காத மாணவர்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம் என்று சமூகநலத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் குறைவாக இருந்தால் புகார் தெரிவிக்க 18004258971 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் செயல்பாட்டில் இருந்து வருகிறது.


இந்தச் சூழலில், தமிழகம் முழு வதும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டதால் சத்துணவு வழங் கப்படவில்லை.


இந்நிலையில், பள்ளிகள் திறக் கும் வரை 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் அரிசி, பருப்பு ஆகிய உலர் உணவுப் பொருட் கள் மற்றும் 10 முட்டைகள் வழங் கப்பட்டு வருகின்றன.


இதற்கிடையே, முட்டை, உலர் உணவு பொருட்கள் கிடைக்காத மாணவர்கள், ஏற்கெனவே செயல் பாட்டில் இருக்கும் 18004258971 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக, சமூக நலத் துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது:


சத்துணவு சாப்பிட்டு வந்த அனைத்து மாணவர்களையும் நேரில் வரவழைத்து முட்டை, உலர் உணவு பொருட்களை ஊழியர்கள் தவறாமல் வழங்கி வருகின்றனர்.


 இருப்பினும், முட்டை, உலர் உணவு பொருட்கள் கிடைக்காத மாணவர்கள் 18004258971 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். 


அவ்வாறு, புகார் அளிக்கப்பட்டால் சம்பந்தப் பட்ட மாணவர்களுக்கு உடனடி யாக கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment