வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பிக்க அழைப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, September 18, 2020

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பிக்க அழைப்பு

 வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பிக்க அழைப்புவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்;நீக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


'வரும், 2021 ஜன.,1ம் தேதி தகுதி நாளாக கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும், இறுதி வாக்காளர் பட்டியல், ஜன., 20 அன்று வெளியிடப்படும்,' என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில், பட்டியலில், பெயர் திருத்தம்; முகவரி மாற்றம்; பெயர் நீக்கம் செய்ய விரும்புபவர்கள், உரிய படிவங்களை நிரப்பி, ஆதாரங்களை இணைத்து, தாலுகா அலுவலகம்; ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் வழங்கலாம். மேலும், இணையத்தில் விண்ணப்பிக்க,www.nvsp.inஎன்ற இணையதளம் மூலமாக உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment