அரியர் மாணவர்கள் தேர்ச்சி அறிவிப்பை ரத்து செய்ய கோரிய வழக்கு : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, September 16, 2020

அரியர் மாணவர்கள் தேர்ச்சி அறிவிப்பை ரத்து செய்ய கோரிய வழக்கு : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

அரியர் மாணவர்கள் தேர்ச்சி அறிவிப்பை ரத்து செய்ய கோரிய வழக்கு : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி  தாக்கல் செய்த மனு விவரம்:

தமிழக அரசின் இதுபோன்ற உத்தரவுகளால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதோடு, பல்கலைக்கழகங்களின் மாண்பும் கெடும்.  25 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்வில் தோல்வியடைந்தவர்களையும், 25 பாடங்களுக்கும் மேலாக அரியர் வைத்துள்ள மாணவர்களையும் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற வைப்பது  ஏற்புடையதல்ல.

தேர்வை தன்னம்பிக்கையுடன் எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே மாணவர்களின் மனஉறுதி மேம்படும். சிண்டிகேட், செனட் மற்றும் அகாதெமிக் கவுன்சில் கட்டுப்பாட்டில் உள்ள தேர்வு நடைமுறைகளில் தமிழக அரசு தலையிட்டு அறிவிப்பை வெளியிட முடியாது. எனவே இதுதொடர்பான அரசாணைக்கு தடை விதித்து ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.


இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment