அனுமதியின்றி தேர்வு நடத்த தடை:அரசு பல்கலைகளுக்கு உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, September 14, 2020

அனுமதியின்றி தேர்வு நடத்த தடை:அரசு பல்கலைகளுக்கு உத்தரவு

அனுமதியின்றி தேர்வு நடத்த தடை:அரசு பல்கலைகளுக்கு உத்தரவு

கல்லூரித் தேர்வுகளில், 'அரியர்' வைத்திருந்த மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல், 'ஆல் பாஸ்' வழங்கிய நிலையில், அரசு அனுமதி இல்லாமல் தேர்வு நடத்தக் கூடாது என, பல்கலைகளுக்கு உயர் கல்வித் துறை தடை விதித்துள்ளது.


அதேநேரம், கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு, கடைசி செமஸ்டர் தேர்வுகளை மட்டும் நடத்த, அனுமதி அளித்துள்ளது. இன்ஜினியரிங் கடைசி செமஸ்டர் தேர்வுக்கான நேரம் உள்ளிட்ட விபரங்களை, அண்ணா பல்கலையும் அறிவித்துள்ளது


கொரோனா ஊரடங்கால், பல்கலை, கல்லைரிகளின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்கப்பட்டது. அதே நேரத்தில், 2019 ~ 20ம் கல்வியாண்டில், இறுதியாண்டு படித்த மாணவர்களுக்கு, கடைசி செமஸ்டர் தேர்வை மட்டும் நடத்தலாம் என, உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

முந்தைய ஆண்டுகளின் தேர்வுகளில், 'பெயில்' ஆகி, ஏப்ரல், மே தேர்வில் அரியர் தேர்வு எழுத விண்ணப்பித்தாலும், அவர்களுக்கும் ஆல் பாஸ் வழங்கப்பட்டது


.இந்த அறிவிப்பால், பல ஆண்டுகளாக, 20 அரியர்கள் வரை உள்ளவர்கள், தேர்வே இல்லாமல் தேர்ச்சியாகினர். அவர்களில் பலர் பேனர் வைத்தும், 'பேஸ்புக்'கிலும், முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

‌ கல்வியாளர்கள் எதிர்ப்பு ‌

ஆனால், கல்வியாளர்கள் தரப்பில் அரியர், ஆல் பாஸ் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்

.அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் அனில் சகஸ்ரபுதே, அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பாவுக்கு, 'இ ~ மெயில்' அனுப்பி, தமிழக அரசின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்தார்.

‌ பல்கலைக்கு தடை ‌

இந்த விவகாரத்தால், உயர் கல்வி அமைச்சர் அன்பழகனும், உயர் கல்வி முதன்மை செயலர் அபூர்வாவும், பல கட்ட ஆலோசனை நடத்தினர்

. முதல்வர் இ.பி.எஸ்.,சின், ஆல் பாஸ் உத்தரவுக்கு, அரசாணை பிறப்பிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர்

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள எந்த பல்கலையும், அரசின் அனுமதியின்றி தேர்வு நடத்தக் கூடாது என, தடை விதித்து உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

 இறுதியாண்டு மாணவர்களுக்கு, கடைசி செமஸ்டர் தேர்வை மட்டும் நடத்தலாம் என, ஒப்புதல் அளித்துள்ளது. வரும், 24ம் தேதி முதல், 'ஆன்லைன்' வாயிலாக, இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது


. மேலும், 2012ம் ஆண்டு முதல் இன்ஜினியரிங்கில் சேர்ந்து, இறுதியாண்டு கடைசி செமஸ்டரில், பல பாடங்களில் அரியர் வைத்துள்ளவர்களும், வரும் 24ம் தேதி முதல் நடக்கும் ஆன்லைன் தேர்வில் பங்கேற்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

‌ விண்ணப்பப் பதிவு ‌

இந்த தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு, இன்று துவங்க உள்ளது. நாளை மறுதினத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.தேர்வு குறித்து, கல்லைரிகளுக்கு பல்கலை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

ஆன்லைன் தேர்வு ஒரு மணி நேரம் நடத்தப்படும். ஒவ்வொருவரும் வீட்டில் இருந்து, 'மொபைல் போன், லேப்டாப்' மற்றும் கணினி ஏதாவது ஒன்றை பயன்படுத்தி தேர்வு எழுதலாம்

.காலை, 10:00 முதல், மாலை, 5:00 வரையில், நான்கு, 'ஷிப்டு'களாக, ஐந்து நாட்கள் தேர்வு நடக்கும்.

இந்த தேர்வுக்கு, வரும் 19 முதல், 21ம் தேதி வரை, கணினி வழி மாதிரி தேர்வும் நடத்தப்பட உள்ளது

.ஆன்லைன் தேர்வில், மொத்தம் 40 கேள்விகள் இருக்கும். அதில், 30 கேள்விகளுக்கு சரியான விடையை தேர்வு செய்ய வேண்டும். மாணவர்களுக்கான பாடத் திட்டத்தில், ஏதாவது நான்கு அலகுகளை படித்துக் கொள்ள வேண்டும்

.தேர்வின்போது, கணினி, மொபைல் போன் பழுது ஏற்பட்டால், உடனே துறைத் தலைவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தேர்வு முடியும் வரை, கேமராவை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment