அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கும் திட்டம் இல்லை –அமைச்சர் செங்கோட்டையன் - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, September 17, 2020

அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கும் திட்டம் இல்லை –அமைச்சர் செங்கோட்டையன்

அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கும் திட்டம் இல்லை –அமைச்சர் செங்கோட்டையன்

தந்தை பெரியாரின் 142-வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஈரோடு மாவட்டம் கச்சேரி வீதியில் உள்ள பெரியாரின் சிலைக்கு அமைச்சர் செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்சியைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆன்லைன் வகுப்புகளுக்கு உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில் பணிகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்


மேலும், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க, 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை ஆன்லைன் வகுப்பு நடத்தக் கூடாது என்ற நிலையை அரசு மேற்கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.


தொடர்ந்து பேசிய அவர், அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கும் திட்டம் அரசுக்கு இல்லை என்றும், பொருளாதார நெருக்கடியில், அதுபோன்ற நிலைகளில், அரசால் அறிவிக்க இயலாது என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

1 comment: