மதுரையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை - Minnal Kalvi Seithi

Breaking

Friday, September 11, 2020

மதுரையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை

மதுரையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை


மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ஜோதிஸ்ரீ துர்கா(19) தற்கொலை செய்துகொண்டார்

நாளை நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் தேர்வுக்கு தயாராகி வந்த மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த ஆயுதப்படை சார்பு ஆய்வாளர் முருகசுந்தரத்தின் மகள் ஜோதிஸ்ரீ துர்கா (19) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஜோதி துர்காவின் உடலை மீட்ட காவலர்கள், தேர்வு அச்சத்தால்தான் ஜோதிஸ்ரீ துர்கா உயிரிழந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சியடையாத நிலையில் மீண்டும் தேர்வுக்கு தயாராகி வந்த ஜோதிஸ்ரீ துர்கா, அச்சம் மற்றும் மன உளைச்சலாக இருப்பதாக கடிதம் மற்றும் விடியோ ஒற்றை பதிவிட்டுள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு நீட் தேர்வுக்கு தயாராகி வந்த அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் வி.விக்னேஷ், மன உளைச்சலுக்கு ஆளாகி கடந்த புதன்கிழமை கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டார்.

இந்த ஆண்டும் மருத்துவ கனவை நனவாக்க முடியாது என்கிற மன அழுத்தம் ஏற்பட்டு தேர்வுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகள் தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்யும் அளவிற்கு நீட் தேர்வு மன உளைச்சலை ஏற்படுத்தி வருக்கிறது என்பதை நாட்டை ஆள்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பது பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.

Student audio

No comments:

Post a Comment