நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கம்பத்தில் தலைகீழாக தொங்கி வாலிபர் போராட்டம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, September 11, 2020

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கம்பத்தில் தலைகீழாக தொங்கி வாலிபர் போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கம்பத்தில் தலைகீழாக தொங்கி வாலிபர் போராட்டம்


நீட் தேர்வை ரத்து செய்யக்ேகாரி கம்பத்தில் தலைகீழாக தொங்கி வாலிபர் நூதன போராட்டம் நடத்தினார்.  கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணி(36).

 இவர் சிதம்பரம் அருகே உள்ள ஏ.மண்டபம் கிராமத்தில் உள்ள தனது  உறவினர் வீட்டில் தங்கி கொண்டு அந்தப் பகுதியில் டைலர் கடை வைத்துள்ளார்.

 இந்நிலையில் நேற்று இவர் நீட் தேர்வுக்கு எதிராக நூதனமாக  போராட்டம் நடத்தினார். சிதம்பரம்- கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏ.மண்டபம் கிராமத்தின் சாலை நடுவே உள்ள சிசிடிவி கேமரா கம்பத்தில்  தலைகீழாக 5 நிமிடம் தொங்கினார்.

அப்போது நீட் தேர்வுக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினார்.

மேலும் அவர் கையில் வைத்திருந்த பதாகையில், உயிரை காப்பாற்ற படிக்க வேண்டிய படிப்புக்கு, உயிரை போக்ககூடிய நீட் தேர்வு தேவையா? என கேள்வி எழுப்பி இருந்தார்.

 இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த கிள்ளை போலீசார் அவரை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

 கொரோனா ஊரடங்கு நேரத்திலும் நாளை மறுநாள் நீட் தேர்வு  நடைபெற உள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டைலர் மணி தலைகீழாகத் தொங்கி போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  இருக்கிறது.

No comments:

Post a Comment