மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக வேண்டுமா?- தொழிலாளர் கல்வி நிலையம் நடத்தும் பட்டப்படிப்பில் சேரலாம்: விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, September 18, 2020

மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக வேண்டுமா?- தொழிலாளர் கல்வி நிலையம் நடத்தும் பட்டப்படிப்பில் சேரலாம்: விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

 மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக வேண்டுமா?- தொழிலாளர் கல்வி நிலையம் நடத்தும் பட்டப்படிப்பில் சேரலாம்: விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்புதமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் நடத்தும் பட்ட மேற்படிப்பு/ பட்டயப் படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் பட்ட படிப்பு, பட்ட மேற்படிப்பு பயில்வதன் மூலம் மனிதவள மேம்பாட்டு அதிகாரி, தொழில்துறை உதவி ஆணையர்/ஆய்வாளராகப் பணி நியமனம் பெறலாம்.


விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க அக்டோபர் 16-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்டப்படிப்புகள் மற்றும் பிஜி.டி.எல்.ஏ (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப்படிப்பு), D.L.L . & A.L (தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் வார இறுதி பட்டயப் படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) படிப்புகள் சென்னைப் பல்கலைகழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.


பி.ஜி.டி.எல்.ஏ. (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப் படிப்பு) மற்றும் டி.எல்.எல் (தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும்) வார இறுதி பட்டயப் படிப்புகளும் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் நடைபெற்று வருகிறது.


பி.ஏ.( தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ. (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப் படிப்பு) பட்ட / பட்டயப் படிப்புகள் தொழிலாளர் நல அலுவலர் பதவிக்குக் கல்வித்தகுதியாக தமிழ்நாடு தொழிற்சாலைகள் தொழிலாளர் நல அலுவலர்கள் விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது.


இக்கல்வி நிலையத்தில் பயின்ற மாணவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டு மேலாளராக நியமனம் செய்ய, மாணவர்களைத் தேர்வு செய்து, பணி நியமன உத்தரவு வழங்குகிறார்கள். இதன்படி, பல்வேறு மாணவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவளத் துறையில் பணிபுரிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும், தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையில் தொழிலாளர் உதவி ஆணையர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர் பதவிகளுக்கு பி.ஏ.(தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ (தொழிலாளர் மேலாண்மை) மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ. (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப் படிப்பு) ஆகிய பட்ட / பட்டயப் படிப்புகளைத் தகுதிகளாக நிர்ணயம் செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.விருப்பமுள்ள ஏதேனும் ஒரு பட்டம் பெற்ற மாணவர்கள், இளநிலை பட்டப்படிப்பு படித்து இறுதிப் பருவத் தேர்வை எழுதும் மாணவர்கள், எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) / பி..ஜி.டி.எல்.ஏ. (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப் படிப்பு) மற்றும் D.L.L . & A.L (தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும்) வார இறுதி பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் மதிப்பெண் அடிப்படையில் அரசு விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


விண்ணப்பக் கட்டணம் (நேரில்) - ரூ.200/


பட்டியல் இனத்தவருக்கு - ரூ.100/-


(சாதிச் சான்றிதழ் நகல் தாக்கல் செய்யவேண்டும்)


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள். 16.10.2020


தபாலில் பெற விரும்புவோர், விண்ணப்பக் கட்டணம் + தபால் கட்டணமாக ரூ.50/- கூடுதலாக அனுப்ப வேண்டும். வங்கி வரைவோலை “The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai - 5” என்ற பெயருக்கு எடுத்து அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.


மேலும் விவரங்களுக்கு : தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம்

எண்.5 காமராசர் சாலை, சென்னை - 600 005

தொலைபேசி எண்.044 - 28440102 / 28445778


email: tilschennai@tn.gov.in”.


இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment