வீட்டிற்கே சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, September 26, 2020

வீட்டிற்கே சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்

 வீட்டிற்கே சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்


அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர், மாணவர்களின் வீடுகளுக்கே சென்று, பாடம் நடத்தி வருகிறார். 


தஞ்சாவூர் மாவட்டம், ஏனாதி கரம்பை அரசு உயர் நிலைப்பள்ளி கணித ஆசிரியர் தமிழரசன், 53.விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் தான், இப்பள்ளியில் அதிகம் படிக்கின்றனர். இவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் படிப்பறிவு இல்லாதவர்கள். 


கொரோனா ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் மூடிக்கிடப்பதால், மாணவர்கள் வீட்டில் முடங்கினர்.


 வசதியில்லாததால், ஆன்லைனிலும் பாடம் படிக்க முடியாமல் மாணவர்கள் தவித்தனர். இதையடுத்து, 10ம் வகுப்பு செல்லும், 37 மாணவர்களின் வீடுகளுக்கு சென்று, பாடம் நடத்தி வருகிறார் ஆசிரியர் தமிழரசன்.


 இந்த கல்வி ஆண்டில், ஆறு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை புதிதாக சேர்ந்த, 27 மாணவர்களின் வீடுகளுக்கு சென்று, பாடம் நடத்தி வருகிறார். ஆசிரியர் தமிழரசன் கூறியதாவது: கிராமப்புற மாணவர்கள் என்பதால், மொபைல் வசதி, இன்டர்நெட் வசதியின்றி, ஆன்லைனில் படிக்க முடியாமல் தவித்து வந்தனர். 


அவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்பதற்காக, வீடுகளுக்கு சென்று பாடம் எடுத்து வருகிறேன். இது மாணவர்களுக்கு மட்டுமின்றி, பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment