'ஆன்லைன்' தேர்வை எழுதாதவர்களுக்கு எழுத்து தேர்வு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, September 26, 2020

'ஆன்லைன்' தேர்வை எழுதாதவர்களுக்கு எழுத்து தேர்வு

 'ஆன்லைன்' தேர்வை எழுதாதவர்களுக்கு எழுத்து தேர்வுதொழில்நுட்ப கோளாறால் ஆன்லைன் செமஸ்டர் தேர்வை எழுத முடியாதவர்களுக்கு எழுத்து தேர்வு நடத்தப்படும்' என அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.


கொரோனா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்ட இறுதி ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வை ஒவ்வொரு பல்கலையும் ஒவ்வொரு விதமாக நடத்துகின்றன. 


அண்ணா பல்கலையை பொறுத்தவரை இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கு போட்டி தேர்வுகள் போன்று 'ஆன்லைன்' வழியாக தேர்வை நடத்துகிறது.


இதில் 'புராஜக்ட்' மற்றும் 'வைவா' தேர்வுகள் 22ல் 'ஆன்லைன்' வழியில் நடத்தப்பட்டன. செப். 24 முதல் செமஸ்டர் இறுதி தேர்வுகள் துவங்கின. 


அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு துறை வழங்கிய விதிகளின் படி பெரும்பாலான மாணவர்கள் தேர்வில் பங்கேற்றுள்ளனர்.


ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாட வாரியாக தேர்வு நடந்து வருகிறது. மாணவர்கள் வீட்டில் இருந்தவாறே கணினி, லேப்டாப் மற்றும் அலைபேசி வாயிலாக தேர்வில் பங்கேற்கின்றனர்.


இந்நிலையில் 10 முதல் 20 சதவீத மாணவர்கள் தொழில்நுட்ப கோளாறுகள், மின் இணைப்பு பிரச்னை, இணையதள பிரச்னை போன்றவற்றால் தேர்வை முழுமையாக முடிக்கவில்லை. அதனால் புதிய தேர்வு விதிமுறைகளை அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கால அட்டவணையை பின்பற்றி முடிந்த வரை ஆன்லைன் வழி தேர்வுகளில் முதல் முயற்சியிலேயே பங்கேற்க வேண்டும். தீர்க்க முடியாத பிரச்னைகளால் தேர்வை முழுமையாக முடிக்க இயலாதவர்களுக்கு இந்த தேர்வு அட்டவணை முடிந்ததும் ஒரு வாரத்தில் மீண்டும் ஆன்லைன் தேர்வில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும்.


அதிலும் பங்கேற்க முடியாதவர்களுக்கு புதிய கால அட்டணை வெளியிடப்பட்டு நேரடி எழுத்து தேர்வு நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment