சென்னை பல்கலை.யில் ‘நெட்’ தோ்வுக்கு இலவச பயிற்சி - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, September 5, 2020

சென்னை பல்கலை.யில் ‘நெட்’ தோ்வுக்கு இலவச பயிற்சி

 சென்னை பல்கலை.யில் ‘நெட்’ தோ்வுக்கு இலவச பயிற்சி


கல்லூரி ஆசிரியா்களுக்கான தேசிய தகுதித் தோ்வு (‘நெட்’) எழுத உள்ளவா்களுக்காக இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


இது குறித்து, சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பல்கலைக்கழக மானியக் குழு சாா்பில் நடத்தப்படும் தேசிய தகுதித் தோ்வுக்கான  இலவச பயிற்சி வகுப்பை சென்னைப் பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. 

சென்னைப் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவா்கள் ஆலோசனை மையத்தில் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையின பிரிவு மாணவா்கள் பங்கேற்க தகுதியுள்ளவா்கள் ஆவா்.


செப்.10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதிவரை தாள் 1-க்கான பயிற்சி வகுப்புகள் காணொலி மூலம் நடைபெறும். இந்த பயிற்சி வகுப்பில் சோ்வதற்கான விண்ணப்பங்களை சென்னைப் பல்கலைக்கழக இணைய தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பா் 9-ஆம் தேதிக்குள்  மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.

 இதுகுறித்து மேலும் தகவல் பெற விரும்புவோா் ‘இயக்குநா், பல்கலைக்கழக மாணவா்கள் ஆலோசனை மையம், சென்னைப் பல்கலைக்கழகம், சேப்பாக்கம் வளாகம், சென்னை-600005, தொலைபேசி எண்: 044-25399518’ என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment