நீட் தேர்வு :உயிர் கொடுத்த உயிரியல் :இன்னல் தந்த இயற்பியல்: மாணவர்கள் பேட்டி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, September 13, 2020

நீட் தேர்வு :உயிர் கொடுத்த உயிரியல் :இன்னல் தந்த இயற்பியல்: மாணவர்கள் பேட்டி

நீட் தேர்வு :உயிர் கொடுத்த உயிரியல் :இன்னல் தந்த இயற்பியல்: மாணவர்கள் பேட்டி

தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வை இன்று நடத்தியது. இந்த தேர்வை எழும 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந்தனர். தேர்வு எழுதிய பெரும்பாலான மாணவர்கள் உயிரியல் பாடப்பிரிவில் கேள்விகள் எளிதாக இருந்ததாக கருத்து தெரிவித்தனர்.


எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்பிற்கு அகில இந்திய அளவில் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. நீட் எனப்படும் இந்த நுழைவுத் தேர்வை மத்திய அரசின் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) நடத்துகிறது.

நாடு முழுவதும் கொரோனா பரவி இருந்ததன் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நீட் தேர்வு இன்று திட்டமிட்டப்படி நடத்தப்பட்டது.சுமார் 15 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர்.

நீட் தேர்வு எழுத வந்த மாணவ மாணவியர் கடும் சோதனைக்கு பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இந்த தேர்வு சர்ச்சைகள் இன்றி நடந்து முடிந்தது. சென்னையில் நீட் தேர்வு எழுதி முடித்த மாணவர்கள் கூறும் போது, உயிரியல் பாடப்பிரிவு தொடர்பான கேள்விகள் எளிதாக இருந்ததாக தெரிவித்தனர். இயற்பியல் பாடப்பிரிவில் நாங்கள் எதிர்பார்த்த கேள்விகள் கேட்கப்படவில்லை என்றார்கள்

சோர்வு ஏற்படவில்லை


முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது வினாத்தாள் எளிதானது என்று சென்னையைச் சேர்ந்த பிரின்சி கூறினார். பரீட்சை ஹாலில் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக தங்கியிருந்தாலும், தனக்கு சோர்வு எதுவும் ஏற்படவில்லை என்று கூறினார்.

கடினம் இல்லை

நீட் வினாத்தாள் எளிதாகவும் இல்லாமல் கடினமாகவும் இல்லாமல் மிதமாக இருந்தது என்று சென்னையைச் சேர்ந்த சஞ்சய் லோகேஷ் கூறினார். உயிரியல் கேள்விகள் எளிதாக இருந்து என்றும், இயற்பியல் கேள்விகள் கடினமானவை என்றும் கூறினார்.

என்.சி.இ.ஆர்.டி அடிப்படை

கௌரி கலே என்ற மாணவி உயிரியல் கேள்விகள் மிகவும் எளிதானது. இயற்பியலில் மூன்று பிரிவுகளிலும் தேர்வு கடினமானதாக இருந்தது என்றார். ஸ்வேதா பிரியா என்ற மாணவி கூறும் போது,.பெரும்பாலான கேள்விகள் என்.சி.இ.ஆர்.டி அடிப்படையில் இருந்தது. இதில் ஆச்சர்யப்பபடும் அளவுக்கு எதுவும் இல்லை என்றும் கூறினார்.

ஆச்சர்யமாக இருந்தது

5-10 கேள்விகள் தனக்கு ஆச்சரியமாக இருந்தது என்று சிவஞ்சலி நானாவேர் என்ற மாணவி கூறினார். அவருக்கு உயிரியல் தேர்வு எழுதாக இருந்தது என்றும மற்ற இரண்டு பிரிவுகளிலம் கொஞ்சம் அதிக சிரமத்தை எதிர் கொண்டதாகவும் கூறினார்.


கேள்விகள் எப்படி இருந்தது

இந்திய ராணுவத்தில் சிப்பாய்.ஆக உள்ள ஜாவேத் உசேன் தேர்வு பற்றி கூறுகையில், உயிரியலை முதலில் முயற்சித்தேன், சுமார் 15 கேள்விகள் அதிக சிரமத்தை கொடுத்தன. மீதமுள்ளவை நடுத்தர அளவில் சிரமமாக இருந்தது.. பெரும்பான்மையான கேள்விகள் தாவரவியலிலிருந்து வந்தவை. மற்ற இரண்டு பிரிவுகளுடன் ஒப்பிடும்போது இயற்பியல் மிகவும் கடினமாக இருந்தது. வேதியியல் பிரிவில் கரிம மற்றும் கனிம தலைப்புகளின் அடிப்படையில் கேள்விகள் இருந்தது என்றார்.

No comments:

Post a Comment