இறுதி செமஸ்டர் தேர்வு முடியும் முன் முதுகலை படிப்பிற்கு மாணவர் சேர்க்கை கூடாது: கல்லூரி கல்வி இயக்குநரகம் உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, September 15, 2020

இறுதி செமஸ்டர் தேர்வு முடியும் முன் முதுகலை படிப்பிற்கு மாணவர் சேர்க்கை கூடாது: கல்லூரி கல்வி இயக்குநரகம் உத்தரவு

இறுதி செமஸ்டர் தேர்வு முடியும் முன் முதுகலை படிப்பிற்கு மாணவர் சேர்க்கை கூடாது: கல்லூரி கல்வி இயக்குநரகம் உத்தரவு


உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகளில் இறுதி பருவத்தேர்வுகள் முடியும் முன் முதுகலை பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. கலை, அறிவியல் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான இறுதி பருவத்தேர்வு இன்னும் நடத்தி முடிக்கப்படவில்லை.


அதற்கு முன்பே பல கலை, அறிவியல் கல்வி நிறுவனங்களில் 5வது செமஸ்டர் மதிப்பெண்களை கணக்கில் கொண்டு முதுகலை பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடப்பதாக புகார் எழுந்தது.

இதையடுத்து இறுதி பருவ தேர்வு முடியும் முன் கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படக்கூடாது என கல்லூரி கல்வி இயக்குநரகம்  உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment