புதிய ஓய்வூதியத்திட்ட பணிக்கொடை எந்த அரசாணையும் பிறப்பிக்கவில்லை - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, September 15, 2020

புதிய ஓய்வூதியத்திட்ட பணிக்கொடை எந்த அரசாணையும் பிறப்பிக்கவில்லை

புதிய ஓய்வூதியத்திட்ட பணிக்கொடை எந்த அரசாணையும் பிறப்பிக்கவில்லை

புதிய ஓய்வூதியதிட்டம் குறித்து இன்று வரை அரசாணை வெளியிடப் படவில்லை, என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2007 க்குப்பின் அரசு ஊழியர்களாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடை வழங்குவது குறித்து இது வரை அரசாணை மற்றும் வழிமுறைகள் வெளியிடப் பட்டுள்ளதா, என மதுரை திருநகர், தனக்கன்குளத்தை சேர்ந்த ராமசாமி என்பவர் நிதித்துறைக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி தகவல் கேட்டுள்ளார்.


அரசின் சார்பு செயலாளர் வேலாயுதம் வழங்கியுள்ள பதிலில் தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடை வழங்குவது குறித்து எந்த அராணையும், வழிமுறைகளும் வெளியிடப்படவில்லை, என தெரிவித்து உள்ளார்

.2007 முதல் செயல்படுத்தப்பட்டு வரும் தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தில் பணிக்கொடை பற்றிய எந்த அரசாணையும் வெளியிடப்படாதது அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment