இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு, மதிப்பெண் கணக்கீட்டு முறை.. வழிகாட்டு நெறிமுறைகள் - அண்ணா பல்கலை வெளியீடு - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, September 22, 2020

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு, மதிப்பெண் கணக்கீட்டு முறை.. வழிகாட்டு நெறிமுறைகள் - அண்ணா பல்கலை வெளியீடு

 இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு, மதிப்பெண் கணக்கீட்டு முறை.. வழிகாட்டு நெறிமுறைகள் - அண்ணா பல்கலை வெளியீடு


அண்ணா பல்கலைகழகம் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு மற்றும் மதிப்பெண் கணக்கீட்டு முறை குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.


பொறியியல் கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு மற்றும் மதிப்பெண் கணக்கீட்டு முறை குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. 


அதன்படி, ஆன்லைன் மூலம் மாணவர்கள் தேர்வு எழுதும் இடத்தில் சத்தம் எழுந்தால் மாணவர்களின் தேர்வு செல்லாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே மாணவர்கள் கணினி முன்பு அமர வேண்டும்.தேர்வு எழுதும் மேஜை மீது எந்த பொருட்களும் இருக்கக்கூடாது. குறிப்பாக மாணவர்கள் மாஸ்க் அணியக்கூடாது எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 


விடைகளை தேர்ந்தெடுக்கும் Optional முறையில் வினாத்தாள் இருக்கும் எனவும், 40 கேள்விகள் இடம்பெற்றுள்ள நிலையில் 30 கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் அளித்தால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 எழுத்துத்தேர்வுக்கு 50 மதிப்பெண்களும், அகமதிப்பீடு எனும் Internal முறைக்கு 20 மதிப்பெண்களும், முந்தைய செமஸ்டர் தேர்விலிருந்து 30 மதிப்பெண்கள் என மொத்தம் 100 மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment