ஆன்லைனில் ஒரு மணி நேரம் தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Monday, September 14, 2020

ஆன்லைனில் ஒரு மணி நேரம் தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

ஆன்லைனில் ஒரு மணி நேரம் தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

பொறியியல் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் ஒரு மணி நேரம் தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


கரோனா சூழல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் ஆகஸ்ட் 12-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் அக்டோபர் 22-ம் தேதி தொடங்கி 29-ம் தேதியுடன் முடிவடைகின்றன. தியரி பாடங்கள் 24-ம் தேதி தொடங்குகின்றன.

இந்நிலையில் இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடைபெறும் என்றும் ஒரு நாளைக்கு 4 முறை தேர்வு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி செமஸ்டர் தேர்வில் அப்ஜெக்டிவ் முறையில் 40 கேள்விகள் கேட்கப்படும். அதில் 30 கேள்விகளுக்குப் பதிலளித்தால் போதும்.

ஒவ்வொரு பாடத்திலும் உள்ள 5 யூனிட்டுகளில் 4 யூனிட்டுகளை மாணவர்கள் பயின்றால் போதும். முதல் முறையாக ஆன்லைனில் தேர்வு நடத்தப்படுவதால், மாதிரி இணையத் தேர்வு 19 மற்றும் 21-ம் தேதிகளில் நடைபெறும்.


தேர்வின்போது கேமரா, மைக், லேப்டாப் உள்ளிட்டவற்றை மாணவர்கள் தயாராக வைத்திருக்க வேண்டும். இணையவழித் தேர்வின் இடையே மின்சாரக் கோளாறு அல்லது இணையத்தில் பிரச்சினை என்றால் உடனடியாக ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment