இந்தியாவின் தரத்தை உயர்த்தும் அறிவுப்பூர்வ ஆவணம்: புதிய கல்வி கொள்கைக்கு மாஜி துணைவேந்தர் பாராட்டு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, September 13, 2020

இந்தியாவின் தரத்தை உயர்த்தும் அறிவுப்பூர்வ ஆவணம்: புதிய கல்வி கொள்கைக்கு மாஜி துணைவேந்தர் பாராட்டு

இந்தியாவின் தரத்தை உயர்த்தும் அறிவுப்பூர்வ ஆவணம்: புதிய கல்வி கொள்கைக்கு மாஜி துணைவேந்தர் பாராட்டு


புதிய கல்வி கொள்கை தற்போது இந்திய கல்வி தரத்தை சர்வதேச அளவில் உயர்த்துவதற்கு அத்தியாவசியமாக தேவைப்படும் அறிவுப்பூர்வ திட்ட ஆவணம்' என அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.


புதிய கல்வி கொள்கையின் முக்கிய அம்சங்கள் குறித்த அவரது அறிக்கை

தேசிய கல்வி கொள்கை என்பது மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட திட்ட ஆவணமாகும். இது ஒருங்கிணைந்த தொழில்நுட்ப அறிவு நிறைந்த பரிந்துரைகள் கொண்ட ஆவணம். இந்திய கல்வி முறையின் எதிர்காலம் குறித்து இதுவரை எழுதப்படாத அளவுக்கு நுட்பமான அறிவுபூர்வமான ஆவணங்களில் ஒன்றாக புதிய கல்வி கொள்கை அமைந்துள்ளது.

இந்தியாவில் 21ம் நூற்றாண்டுக்கான கல்வி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் விரிவான வழிகாட்டுதல்களையும் கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக கருத்துக் கூறுவது நாகரிகம் அல்ல. இந்தியாவின் கல்வி தரத்தின் மீதும் மேம்பாட்டின் மீதும் அக்கறை உள்ள அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களும் புதிய கல்வி கொள்கைக்கு கிடைத்துள்ளன.


நம் இளைஞர்களிடையே படைப்பாற்றல் மற்றும் பகுத்தறியும் சிந்தனைகளை அதிகப்படுத்த வேண்டும். புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்குவது மற்றும் ஆராய்ச்சி எண்ணங்களை செயல்களையும் அதிகப்படுத்த வேண்டும். அப்போது தான் நாட்டின் சமூக பொருளாதார
மேம்பாட்டில் மாணவர்கள் போதிய அளவுக்கு பங்களிக்க முடியும்.

படித்ததை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் பழைய முறைக்கு விடை கொடுத்து விட்டு
சிந்திக்கும் திறனை மேம்படுத்தும் வகையில் புதிய கல்வி கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை 2030ம் ஆண்டுக்குள் 100 சதவீதமாக உயர்த்த வேண்டும். உயர்நிலை கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் 2035ல் 50 சதவீதமாக உயர
வேண்டும்.

புதிய கல்வி கொள்கையில் பள்ளி கல்வியில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் வருமாறு:

* குழந்தைகள் பராமரிப்பை பேணும் வகையில் மழலையர் பள்ளிகள் உயர்நிலை
பள்ளிகளுடன் இணைக்கப்பட உள்ளன. 10+2 என நடைமுறையில் உள்ள வகுப்பு முறை மன வளர்ச்சியின் அடிப்படையில் மாற்றப்பட்டு 5 + 3 + 3 + 4 என வகைப்படுத்தப்பட உள்ளது.

* அதாவது ஐந்தாம் வகுப்பு பின் எட்டாம் வகுப்பு பின் பிளஸ் 1 வகுப்பு வரையிலும் தனித்தனியாக நடத்தப்படும். பிளஸ் 2வில் இருந்து கல்லுாரி படிப்பு துவங்கி விடும்.


* மதிய உணவுடன் குழந்தைகளுக்கு சத்தான காலை உணவும் வழங்க பரிந்துரைக்கப்பட்டு உ ள்ளது. பாடத்திட்ட அமைப்பானது மாணவர்களின் விருப்பம் திறன் ஆகியவற்றுக்கு ஏற்ப தேர்வு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாணவர்களின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தவும் கற்றல் திறன் மதிப்பீட்டு முறையை மேம்படுத்தவும் பல்வேறு வழிகள் கூறப்பட்டுள்ளன.

சமமான கட்டாய கல்வி



* அனைத்து வகை பள்ளி குழந்தைகளுக்கும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தை விரிவுபடுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு வரையில் தாய்மொழியில் கற்பிக்க
வலியுறுத்தப்பட்டுள்ளது.

* அதேபோல பள்ளிப் படிப்பிலேயே அனைத்து மாணவர்களுக்கும் தொழில் கல்வியை
ஊக்குவிக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

* பள்ளி நிர்வாகங்கள் கூடுதல் கடமை உணர்வுடனும் பொறுப்புணர்வுடனும் செயல்பட
வலியுறுத்தப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிந்த மாணவர்களுக்கு உதவ நிதி ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கல்லுாரிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் அளித்தல் திறன் மேம்பாட்டு படிப்புகளை அதிகப்படுத்துதல் நான்காண்டு பல்துறை கல்வி முறை பட்டப்படிப்பில் சேர்தல் படிப்பில் சேர்வதிலும் விலகுவதிலும் படிப்பை முடிப்பதிலும் நெகிழ்வு தன்மை உருவாக்க்ப்பட்டுள்ளது.

* பல்வகை பாடங்களை நடத்துதல் மற்றும் ஆராய்ச்சிக்கான பல்கலைகளை துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டம்
கற்பித்தல் முறை மதிப்பீட்டு முறை ஆகியவற்றை முற்றிலுமாக மாற்றுவதற்கு
பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

* மதிப்பெண் வங்கி திட்டத்தை உருவாக்கி மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்க
திட்டமிடப்பட உள்ளது. தேசிய ஆராய்ச்சி நிறுவனம் புதிதாக அமைக்கப்பட உள்ளது

ஆசிரியர் கல்வியை மேம்படுத்துதல் கல்வியில் தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்துல் தொழிற்கல்வியை அதிகரித்தல் முதியோருக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பை வழங்குதலுக்கு முக்கித்துவம் அளிக்கப்படும்.

* மக்களிடையே மொழி அறிவை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கல்வி பேரவை அமைத்தல் தேசிய தர மதிப்பீட்டு கவுன்சிலுக்கு தன்னாட்சி
அதிகாரம் அளித்தல் தேசிய கல்வி ஆணையம் அமைத்தல் மற்றும் தேசிய உயர்கல்வி
ஒழுங்குமுறை மன்றம் அமைத்தல் என புதிய திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

* நாட்டின் மொத்த உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்விக்கும் 2 சதவீதத்தை ஆராய்ச்சிக்கும் ஒதுக்குவது என்பது எல்லாவற்றையும் விட மிகச் சிறந்த பரிந்துரை.

மாற்றம் விருப்பம் மற்றும் நம்பிக்கை அடிப்படையில் புதிய கல்வி கொள்கையை பெற்றுஉள்ளோம். ஒவ்வொரு மாநி

No comments:

Post a Comment