ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு : ஆறு பல்கலை.கள் திட்டம் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, September 11, 2020

ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு : ஆறு பல்கலை.கள் திட்டம்

 ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு : ஆறு பல்கலை.கள் திட்டம்


தமிழகத்தில் ஏழு பல்கலைகள் நேரடி தேர்வையும் ஆறு பல்கலைகள் ஆன்லைன் வழி தேர்வையும் நடத்த உள்ளன. சில பல்கலைகள் இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை.

கொரோனா ஊரடங்கு காரணமாக பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் செமஸ்டர் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.

 இறுதியாண்டு மாணவர்கள் தவிர மற்ற மாணவர்களுக்கு செமஸ்டர்
தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன

ஏப்ரல் மே மாதம் தேர்வுக்கு விண்ணப்பித்த அரியர் மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் அறிவிக்கப்பட்டது.

 இந்நிலையில் இறுதியாண்டு தேர்வுகள் 15ம் தேதி முதல் நடத்தப்பட உள்ளன. இந்தத் தேர்வை பெரும்பாலான பல்கலைகளும் அவற்றின் இணைப்பு கல்லுாரிகளும் ஆன்லைனில் நடத்த உள்ளன

.அண்ணா பல்கலை, மதுரை காமராஜ், கோவை பாரதியார், காரைக்குடி அழகப்பா, கோவை வேளாண் பல்கலை மற்றும் ஆசிரியர் கல்வியியல் பல்கலை போன்றவை ஆன்லைன் வழியில் தேர்வுகளை நடத்த முடிவு செய்துள்ளன.இதற்கானஅறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் லேப்டாப் அல்லது அலைபேசி வழியே தேர்வை எழுத வழிவகை செய்யப் பட்டுள்ளது


.சேலம் பெரியார் பல்கலை, சென்னை அம்பேத்கர் சட்ட பல்கலை, தஞ்சை தமிழ் பல்கலை, திருச்சி பாரதிதாசன் பல்கலை, அண்ணாமலை பல்கலை, தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலை, வேலுார் திருவள்ளுவர் பல்கலை ஆகியன நேரடியாக எழுத்து தேர்வை நடத்துகின்றன. அதற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது

.சென்னை பல்கலை, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை போன்றவை ஆன்லைனில் தேர்வை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன.

 தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலை, மீன்வள பல்கலை போன்றவை தேர்வு குறித்து இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை

No comments:

Post a Comment